தந்தை இறந்தது கூட தெரியாமல் உலகக் கோப்பையில் விளையாடிய வீராங்கனை… பின்னர் வெளியிட்ட உருக்கமான பதிவு… 

Photo of author

By Sakthi

 

தந்தை இறந்தது கூட தெரியாமல் உலகக் கோப்பையில் விளையாடிய வீராங்கனை… பின்னர் வெளியிட்ட உருக்கமான பதிவு…

 

தந்தை இறந்தது கூட தெரியாமல் பெண்கள் கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வீராங்கனை கர்மோனா அவர்கள் விளையாடியுள்ளார். பின்னர் தந்தை இறந்தது பற்றி வீராங்கனை கர்மோனா அவர்கள் உருக்கமான பதிவு ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

 

இந்த ஆண்டுக்கான பெண்கள் கால்பந்து உலகக் கோப்பை தொடரின் இறுதிப் பேட்டி கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி நடந்து முடிந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற பெண்கள் கால்பந்து உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்தியது.

 

9வது ஆண்டுக்கான பெண்கள் கால்பந்து உலகக்கோப்பை தொடரில் அடித்து பிடித்து முதல்முறையாக ஸ்பெயின் நாட்டு பெண்கள் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதே போல மற்றொரு பக்கம் இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

 

ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய பெண்கள் கால்பந்து உலகக் கோப்பை தெடரின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் அதாவது ஆகஸ்ட் 20ம் தேதி ஆஸ்திரேலியாவில் சிட்னியில் நடைபெற்றது.

 

பரபரப்பாக நடந்த இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக பெண்கள் கால்பந்து உலகக் கோப்பையை கைப்பற்றியது. இறுதிப் போட்டியில் ஸ்பெயின் கால்பந்து அணியின் கேப்டன் வீராங்கனை ஒல்கா கர்மோனா அவர்கள் 29வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

 

கேப்டன் ஒல்கா கர்மோனா அவர்கள் அடித்த அந்த ஒரு கோல்தான் ஸ்பெயின் அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத் தந்துள்ளது. இருந்தும் ஸ்பெயின் அணி உலகக் கோப்பையை முதல்முறையாக வென்றதற்கு பின்னால் பெரிய சோகம் ஒன்று நடந்தது தெரியவந்துள்ளது.

 

அந்த சோகம் என்னவென்றால் ஸ்பெயின் அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத்தந்த அணியின்.கேப்டன் ஒல்கா கர்மோனா அவர்களின் தந்தை உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அதாவது ஆகஸ்ட் 18ம் ஆம் தேதி உயிரிழந்தார்.

 

ஞாயிற்றுக் கிழமை இறுதிப் பேட்டி இருந்ததால் உறவினர்களும், நண்பர்களும் கலந்து பேசி தந்தை உயிரிழந்த செய்தியை வீராங்கனை ஒல்கா கர்மோனா அவர்களிடம் சொல்லாமல் மறைத்து விட்டனர். ஆடுகளத்தில் பம்பரம் போல சுற்றி விளையாடி உலகக் கோப்பை பெற்று தந்த கர்மோனா அவர்களிடம் சிறிது நேரத்திலேயே தந்தை இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தி அறிவிக்கப்பட்டது.

 

இதைக் கேட்ட கர்மோனா அவர்கள் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். மேலும் தந்தை இறந்தது பற்றி சமூக வலைதளத்தில் ஒல்கா கர்மோனா அவர்கள் உருக்கமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவில் வீராங்கனை ஒல்கா கர்மோனா அவர்கள் “தனித்துவமான ஒன்றை அடைவதற்கு நீங்கள் எனக்கு பெரும் பலத்தை கொடுத்தீர்கள். இன்றிரவு(ஆகஸ்ட்20) என்னை நீங்கள் பார்த்திருப்பீர்கள். என்னை பார்த்து நீங்கள் பெருமைப்பட்டு இருப்பீர்கள் என்பது தெரியும். அப்பா உங்களுடைய ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்தனை செய்கிறேன்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.