IPL-லில் களமிறங்கும் அந்த வீரர்!! உற்ச்சாகத்தில் CSK ஆணி ரசிகர்கள்!!

Photo of author

By Sakthi

IPL-லில் களமிறங்கும் அந்த வீரர்!! உற்ச்சாகத்தில் CSK ஆணி ரசிகர்கள்!!

Sakthi

Updated on:

The player who will play in IPL!! CSK Ani fans at the top!!

தோனி 2025 ஐபிஎல் தொடருக்காக   CSK அணியில் விளையாடுவார் என்ற  தகவலை வழங்கியுள்ளது சென்னை அணி நிர்வாகம். 2025 IPL தொடருக்காக தக்க வைக்கப்படும்  வீரர்களின் பட்டியலை அக்டோபர் 31 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அறிவிக்க  வேண்டும் என IPL ஆட்சிக்குழு தெரிவித்து இருந்தது.

இந்த நிலையில் CSK  அணி ஏலத்தில் தக்க வைக்கப்படும் விளையாட்டு வீரர்களின் பெயர் பட்டியல் மற்றும்  அவர்களுக்கான ஏல தொகையையும் அறிவித்து இருந்தது CSK அணி.  சென்னை அணி நிர்வாகமானது  அனிருத் இசையில்  ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது.  இதில் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா, ஷிவம் துபே, பதிரனா ஆகியோர் தக்க வைத்துக் கொள்ளப்படுவார்கள் என்ற தகவலை கொடுத்து இருந்தது.

அதன்படி, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜடேஜா தலா ரூ.18 கோடிக்கும், மதீஷா பதிரனா ரூ.13 கோடிக்கும், ஷிவம் துபே ரூ.12 கோடிக்கும், தோனி ரூ.4 கோடிக்கும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். 2025 ஐபிஎல் தொடரில் CSK ஆணியில் தோனி UNCAPPED பிளேயாராக விளையாடுவார் என்ற தகவலை சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இச் செய்தி CSK அணி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.