சர்க்கரை என இதை சாப்பிட்ட குழந்தையின் பரிதாப நிலை! பெற்றோர் பரிதவிப்பு!
பெற்றோர் என்ன தான் குழந்தைகளை பார்த்துக் கொண்டிருந்தாலும், அவர்களின் சுட்டி தனத்தினால் நாளுக்குநாள், அவர்களின் விளையாட்டுக்கள் அதிகரித்து வரும் வண்ணமே உள்ளது. வீட்டில் பெரியவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்கள் குழந்தைகளை பார்த்துக்கொள்வார்கள். இல்லாத பட்சத்தில் இப்படி ஏதேனும் பிள்ளைகள் செய்து விடுகிறார்கள். அதனால் பாதிப்பு என்னவோ அவர்களுக்கு தான் என்றாலும், பெற்றோர்களின் மனது எவ்வளவு பரிதவிக்கிறது.
தென்காசி மாவட்டத்தில், செங்கோட்டை மேலூர் கேசி ரோடு குடிநீர் தொட்டி கீழ்புரம் பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். கூலி தொழிலாளியான இவர், இவருடைய மனைவி பிரேமா மற்றும் இவர்களது குழந்தைகள் என வாழ்ந்து வருகின்றனர். இது இவர்களது இரண்டாவது குழந்தை இசக்கியம்மாள் 5 வயது. குழந்தை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வீட்டின் அருகிலுள்ள ஒரு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அந்த வீட்டில் இருந்த ப்ளீச்சிங் பவுடரை சர்க்கரை என நினைத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் இசக்கியம்மாள் வலியால் துடி துடித்தாள். இதைப் பார்த்த அந்த வீட்டுக்காரர் இதுபற்றி சீதாராஜுக்கு தகவல் தெரிவித்தார். இதனை அறிந்த சீதாராஜ் அதிர்ச்சி அடைந்து, பின்னர் குழந்தையை தூக்கி வந்து தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக, சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து குழந்தையை காப்பாற்றி விட்டனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சீதாராம் தனது குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தார். ஆனால் நாளாக ஆக குழந்தை உடல் மெலிந்து கொண்டே வருகிறது. ப்ளீச்சிங் பவுடரை சாப்பிடுவதற்கு முன் அழகாக இருந்த குழந்தை தற்போது உடல் மெலிந்து எலும்பும் தோலுமாக பரிதாபமாக காட்சி தருகிறாள். இந்த குழந்தை உணவு சாப்பிட முடியாமல் பரிதவிக்கிறாள். திரவ உணவு மட்டுமே அவளால் குடிக்க முடிகிறது. மேலும் மூச்சுத்திணறல் ஏற்பட்டும் அவதிப்படுகிறாள் என்றும் தெரியவந்தது.
ப்ளீச்சிங் பவுடர் சாப்பிட்டதால் தான் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே தற்போது கொரோனா காலமாக உள்ளதால் போதிய வருமானமின்றி குழந்தையை சரிவர கவனிக்க முடியாமல் சீதாராஜ் பெரும் துன்பத்திற்கு ஆளாகி உள்ளார்.
இந்த தகவல் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்ள தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் கண்ணனுக்கு தெரியவரவே, அவர் குழந்தையின் நிலைமையை அறிந்து, அந்தக் குழந்தையை மதுரையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்து வருகிறார்.