வன்னியர் சங்க தலைவரின் தலையை அறுத்து எடுப்போம்!! மிரட்டல் விடுத்த விசிக பெண் நிர்வாகி கைது !!

Photo of author

By Sakthi

PMK-VCK:வன்னியர் சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்த விசிக பெண் நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

கடலூர் மாவட்டம் புவனகிரி அடுத்த மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை, பாமகவில் தொண்டராக இருக்கிறார். இவர் நவம்பர் 1ம் தேதி பு.உடையூர் கிராமத்தின் வழியாக சென்ற போது  அங்கிருந்த 15 பேர் கொண்ட கும்பலால் தாக்கப்படுகிறார். மேலும் அக் கும்பல்  சாதிய பெயரை சொல்லி கொலைவெறி தாக்குதல் நடத்தியது . இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆனது.

பிறகு உயிருக்கு ஆபத்தான நிலையில் செல்லத்துரையை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரை நேரில் பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர்  நேரில் சந்தித்து வந்துள்ளனர். மேலும் செல்லத்துரை மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க புகார் தெரிவித்து உள்ளார்கள் பாமகவினர்.

இதை கண்டிக்கும் விதமாக மஞ்சக்கொல்லை கிராமத்தில் சாலை மறியல் பாமகவினரால் நடத்தப்பட்டது. இதில் பாமக மற்றும்  விசிக கொடி கம்பத்தை  பெண் ஒருவர் கடப்பாரை கொண்டு   இடித்துள்ளார். இது இணையத்தில் பரவியது  இதற்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் விசிகவினர் கடலூர் மாவட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதில் விசிக நிர்வாகிகள் வன்னியர் சங்கத் தலைவர் அருள் மொழியின் தலையை வெட்டுவோம் என்றும் இது திருமா காலம் இன்னும் 42 ஆண்டுகள் விசிகவினரிடம் வன்னியர்கள் அடி வாங்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்கள். இச் செயலை எதிர்த்து தமிழகத்தில் பாமகவினர் போராட்டங்கள் நடத்தினார்கள், மேலும்  பாமக நிறுவனர் ராமதாஸ் மிரட்டல் விடுத்த  விசிகவினரை 24 மணி நேரத்தில் கைது செய்ய அறிக்கை வெளியிட்டார்.

இந்த நிலையில் புவனகிரி போலீசார் சிதம்பரம் அருகே நாஞ்சலுாரை சேர்ந்த  செல்வராணி (45 ) மற்றும் விசிக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.