பாஜகவின் முக்கிய புள்ளியை கைது செய்த காவல்துறை.. டெல்லியை கட்டம் கட்டும் திமுக!!

DMK BJP: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால் சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை அனைத்தும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. கூட்டணி கணக்குகளும், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையும் மும்முரமாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதிமுக உடன், பாஜக, தமாகா கூட்டணி மட்டுமே உறுதியான நிலையில், திமுக உடன், விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற முக்கிய கட்சிகள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன.

தமிழகத்தில் நிலைபெற முடியாமல் தவிக்கும் பாஜக, அதிமுக கூட்டணியில் இடம் பெற்று வெற்றி கணக்குகளை தீட்டி வரும் நிலையில், அதற்கு திமுக அரசு பல்வேறு வகைகளில் சிக்கலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.  அந்த வகையில், அண்மையில் திருப்பரங்குன்றம் தீப தூணில் தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், திமுக அரசு அதனை எதிர்த்து. ஆனால் பாஜக அரசு, திமுகவின் நடவடிக்கைக்கு கண்டனத்தை தெரிவித்து வந்தது. இதனை எதிர்த்து திருப்பரங்குன்றத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் போராட்டம் நடத்திய நிலையில், அவரை காவல் துறையிடம் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது புதிதாக, முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பர் சின்ன காளிபாளையம் பகுதியில் குப்பைகளை கொட்ட மாநகராட்சி முடிவெடுத்த நிலையில், இதனை அந்த பகுதி மக்கள் எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலையும் கலந்து கொண்டார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையினர் மறுப்பு தெரிவித்தும், இதனை நடத்தியதால், பங்கேற்பாளர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பாஜக மாநில தலைவராக இருந்த ஒருவரை கைது செய்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.