திகார் சிறையை முழுவதும் வலையால் மூடிய காவல் துறை!! ஏன் எதற்கு என்று தெரியுமா?

Photo of author

By Sakthi

திகார் சிறையை முழுவதும் வலையால் மூடிய காவல் துறை!! ஏன் எதற்கு என்று தெரியுமா?

Sakthi

The police department has covered the entire Tihar jail with a net!! Do you know why?
திகார் சிறையை முழுவதும் வலையால் மூடிய காவல் துறை!! ஏன் எதற்கு என்று தெரியுமா?
டெல்லியில் உள்ள திகார் சிறையை காவல் துறையினர் முழுவதுமாக வலையை வைத்து மூடி பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். டெல்லியில் இருக்கும் திகார் சிறைக்கு வெளியில் இருந்து சுவர்களைத் தாண்டி செல்போன்கள் வீசப்படுகின்றது. இதை தடுக்க காவல் துறையினர் சிறையை முழுவதும் சுற்றி வலையால் மூடியுள்ளனர்.
டெல்லியில் திகார் சிறையில் பல முக்கியமான குற்றவாளிகள் தண்டனை பெற்று வருகின்றனர். இருந்தும் சில நாட்களாக சிறைக்குள் கைதிகளிடையே  செல்போன் பயன்படுத்துவது அதிகரித்து வருவதாக கூறப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திகார் சிறைக்குள் வைத்து கொல்லை கும்பல் தலைவன் டில்லு தாஜ்புரியாவை அவரது எதிரிகள் திட்டமிட்டு கொன்றனர். கொல்லை கும்பல் தலைவன் தாஜ்புரியாவை வேறு சிறைக்கு மாற்றியதை அறிந்து திட்டமிட்டு சிறைக்குள் வைத்தே கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சிறைக்குள் செல்போன் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் விதமாக சிறை வளாகம் முழுவதும் தடுப்புச் சுவரில் இருந்து வலை கட்டப்பட்டுள்ளது. சிறைக்கு வெளியில் இருந்தே கைதிகள் இருக்கும் இடத்திற்கே செல்போன்கள் வீசப்படுவதால் காவல் துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.