காவல்துறை திருமாவளவனின் ஏவல் துறையாக மாறி இருக்கிறது! அர்ஜுன் சம்பத் விளாசல்!

Photo of author

By Sakthi

கடந்த 2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒரு சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது அதாவது உயர் ஜாதி வகுப்பைச் சார்ந்த மிகவும் ஏழ்மையற்றோரை கண்டறிந்து அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட திருத்தம் தான் அது.

ஆனால் இந்த சட்ட திருத்தத்தை இதற்கு திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த சட்டம் அமலுக்கு வந்தால் உயர்ஜாதி வகுப்பை சார்ந்தவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதுதான் உண்மை. ஆனால் பொருளாதார ரீதியாக அவர்கள் முன்னேறக்கூடாது என்று ஒரு சில சக்திகள் தமிழகத்தில் கருதி வருகின்றன.

இந்த நிலையில் இந்த வழக்கில் அனைத்து விசாரணையும் முடிந்து நீதிபதிகள் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நிலையில், இதற்கான தீர்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் இதற்கான தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக திமுக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி திருவட்டீஸ்வரன் பேட்டை கோவில் முன்பு இந்து மக்கள் கட்சி சார்பாக ஈவேரா மரண சாசனம் பக்கம் 21 வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடக்க இருந்தது இதற்காக அந்த கட்சியினர் சென்றனர் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் அனுமதி பெற்று பிறகு தான் துண்டு பிரசுரம் விநியோகம் செய்ய வேண்டும். இல்லாவிடில் கைது செய்வோம் என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அர்ஜுன் சம்பத் தெரிவித்ததாவது ஈவேரா மரண சாசனம் 21 வது பக்கம் காவல்துறையின் அனுமதி பெற்று விநியோகம் செய்யப்படும். ஆனால் திருமாவளவனுக்கு மட்டும் எந்த விதமான தடையும் விதைக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஆர் எஸ் எஸ் பேரணி அறிவிக்கப்பட்ட அதே நாளில் உள்நோக்கத்துடன் திருமாவளவனுக்கு 500 பகுதிகளில் பேரணி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. சென்ற வாரம் ஆர்எஸ்எஸ் பேரணி நடந்த அதே நாளில் திருமாவளவன் மனுஸ்மிருதி புத்தகங்களை அச்சடித்து விநியோகம் செய்தார். அவரை கைது செய்யவில்லை. காவல்துறை திருமாவளவனின் ஏவல் துறையாக மாறிவிட்டது என்று குற்றம் சுமத்தினார்.

பாஜக இந்து மக்கள் கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்போருக்கு மட்டும் காவல்துறை அனுமதி வழங்குகிறது. பொருளாதார அடிப்படையில் ஏழை மக்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு கொடுப்பது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. பாஜக இதனை வரவேற்றுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரித்திருக்கின்றன. கேரளாவில் இதனை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள்.

சமூக நீதியின் படி ஜாதி மூலமாக இட ஒதுக்கீடு முழுமை அடையாது. பொருளாதார அடிப்படையில் ஏழை மக்களுக்கான இட ஒதுக்கீடு மூலமாகவே உண்மையான சமூக நீதி நிலை நாட்டப்படும். தமிழகத்தில் மட்டும் திமுக இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த விடாமல் தடுக்கிறது.

பால், மின், கட்டணம், சொத்து வரி உயர்வு உள்ளிட்டவை பொதுமக்களை பாதித்துள்ளது. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.