ADMK TVK: இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், அரசியல் அரங்கும், தேர்தல் ஆணையமும் தங்களது பணியில் வேகமெடுத்துள்ளது. சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை அனைத்தும் கூட்டணி கணக்குகளை வகுப்பதிலும், தொகுதி பங்கீட்டிலும் ஆர்வம் காட்டி வருகின்றன. வழக்கம் போல அதிமுகவும் திமுகவும் போட்டி போட ஆரம்பித்து விட்டன. இந்நிலையில் புதிதாக தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய கட்சியும் உதயமாகியுள்ளது. விஜய் கட்சிக்கு தொடக்கத்திலிருந்தே அதிகளவில் ஆதரவு இருந்து வருகிறது.
இதனை பயன்படுத்திய விஜய், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையனையும் தன் வசம் ஈர்த்து விட்டார். செங்கோட்டையன், கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் 8 முறை வெற்றி பெற்று எம்எல்ஏ வாக இருந்த காரணத்தினால், இவர் மீண்டும் தவெக சார்பாக அதே தொகுதியில் நின்று, இபிஎஸ்யை தோற்கடிப்பார் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் செங்கோட்டையன் கட்சி மாறியதால், அவர் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.
இந்நிலையில் செங்கோட்டையனின் அண்ணன் மகன் செல்வம், அதிமுகவில் இணைந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சம்மதித்தால், கோபி தொகுதியில் என் சித்தப்பா செங்கோட்டையனை எதிர்த்து நின்று வெற்றி பெறுவேன் என்று கூறியுள்ளார். இபிஎஸ் செங்கோட்டையனை தீவிரமாக எதிர்ப்பதால் இவரின் இந்த கோரிக்கைக்கு அவர் ஒப்புக்கொள்வார் என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் இபிஎஸ் அதிமுகவின் கோபி தொகுதி வேட்பாளர் பொறுப்பை யாருக்கு கொடுத்தாலும், செங்கோட்டையன் அங்கு வலுவான அடித்தளத்தை அமைத்து இருப்பதால் அங்கு அவர்கள் தோல்வியை தான் தழுவுவார்கள் என்று அரசியல் ஆர்வர்கள் கூறுகின்றனர்.