அட்சய திருதியை நாளில் மூன்று முறை ஏறிய தங்கத்தின் விலை! ஒரே நாளில் இவ்வளவு விலை குறைவா?
அட்சய திருதியை நாளான நேற்று(மே10) மட்டும் தங்கத்தின் விலை மூன்று முறை உயர்ந்தது. அதன்படி நேற்று(மே10) மட்டும் தங்கத்தின் விலை 1240 ரூபாய் அதிகரித்தது. அட்சய திருதியை நாளன்று தங்கம் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த நம்பிக்கையால் மக்கள் நேற்று(மே10) தங்கம் வாங்குவதற்கு நகைக் கடைகளில் குவிந்தனர்.
அட்சய திருதியை நாளான நேற்று(மே10) மூன்று முறை தங்கத்தின் விலை ஏறிய நிலையில் தற்பொழுது இன்று(மே11) தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
ஒரு நாள் ஏற்றம் ஒரு நாள் இறக்கம் என்று விளையாட்டு காட்டி வரும் தங்கத்தை மக்கள் வாங்க போட்டி போடுகின்றனர். ஒரு நாள் தங்கத்தின் விலை அதிரடியாக ஏறினால் அடுத்த நாள் தங்கத்தின் விலை சற்று குறைகின்றது.
இதையடுத்து ஒரு சவரன் தங்கம் கிட்டத்தட்ட 58000 ரூபாய் வரை நெருங்கிய நிலையில் அடுத்தடுத்த நாட்களில் தங்கத்தின் விலை குறைந்து கொண்டே வருகின்றது. தற்பொழுது இன்றைய(மே11) நிலவரப்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை 54000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அதன்படி சவரனுக்கு 160 ரூபாய் குறைந்த நிலையில் சென்னையில் இன்று(மே11) ஒரு சவரன் தங்கம் 54000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. ஒரு கிராம் தங்கம் 6750 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
அதே போல வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 90 காசுகள் குறைந்து 90.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் ஒரு கிலோ வெள்ளி 90500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.