அக்டோபர் மாதத்திலிருந்து இதன் விலை உயரப்போகின்றது:! விலை உயர்வுக்கு காரணம் இதுதான்!
மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டிவி பேனல் இறக்குமதிகான வரி 5 சதவீதத்தை ஓராண்டிற்கு குறைந்திருந்தது.இந்த சலுகை வரியானது இந்த மாதத்துடன் முடிவடைகிறது.இந்தியாவின் டிவி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதன் பேனல்களை பெரும்பாலும் வெளிநாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்கின்றன.
மத்திய அரசு அறிவித்திருந்த 5 சதவீத வரிச்சலுகையால் டிவி தயாரிப்பு செலவு சற்றுக் குறைந்திருந்தது. இதனால் அனைத்து டிவி நிறுவனங்களும் டிவியை குறைந்த விலையில் விற்பனை செய்து வந்தனர்.
தற்போது மத்திய அரசு அறிவித்த இந்த சலுகை வரி முடிவடையிருக்கின்ற நிலையில் மேலும் இந்த வரிச்சலுகையானது நீட்டிக்கப்படுமா என்பது குறித்து மத்திய அரசு தரப்பில் எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதுமட்டுமின்றி 32 அங்குல
டிவிகாண பேனல் 34 டாலராக இருந்த நிலையில் தற்போது 60 டாலராக உயர்ந்து விட்டது.இதன் காரணமாக டிவி உற்பத்தி செலவு முன்பு இருந்ததைவிட மேலும் அதிகரித்து விட்டது.
இச்சூழலில் மத்திய அரசு வரிச் சலுகையை நீட்டிக்க விட்டால்,டிவியின் உற்பத்தி செலவு அதிகரிப்பதனால்,
வருகின்ற அக்டோபர் மாதத்திலிருந்து டிவி அதிக விலையில் விற்கப்படும் என்று தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகின்றது.