பிரதமர் அவர்களின் பேச்சை கேட்கவில்லை!! அபராதம் விதித்த தனியார் பள்ளி!!

0
192
#image_title

பிரதமர் அவர்களின் பேச்சை கேட்கவில்லை!! அபராதம் விதித்த தனியார் பள்ளி!!

மன் கீ பாத் நிகழ்ச்சி ஒளிபரப்பான நாளன்று பிரதமர் மோடி அவர்களின் பேச்சை கேட்காதவர்களுக்கு தனியார் பள்ளி ஒன்று அபராதம் விதித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மன் கீ பாத் நிகழ்ச்சியில் சில நாட்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உரையாற்றினார். இது பள்ளிகளில் நேரடியாக ஒளிபரப்பட்டது.

இதற்கு மத்தியில் பிரதமர் மோடி அவர்களின் பேச்சை கேட்க பள்ளிக்கு வராத குழந்தைகளுக்கு டேராடூனில் தனியார் பள்ளி ஒன்று 100 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

இது குறித்து மாணவர்களுக்கு செய்தி ஒன்றையும் அனுப்பியுள்ளது. அதில் பிரதமர் மோடி அவர்கள் மன் கீ பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய நாளில் பள்ளிக்கு வராத குழந்தைகள் 100 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் அல்லது மருத்துவர் அறிக்கையுடன் பள்ளிக்கு வரவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகார் அடிப்படையில் மாநிலக் கல்வித் துறை அந்த தனியார் பள்ளியிடம் விசாரணை நடத்தி வருகின்றது.

Previous articleசர்ச்சைக்கு உள்ளான தி கேரளா ஸ்டோரி திரைப்படம்!! வேண்டுகோள் வைத்த நடிகை அடா ஷர்மா!!
Next articleஅகில இந்திய வானொலிக்கு கண்டனம்!! மத்திய அமைச்சருக்கு திமுக அரசு கடிதம்!!