விராட் கோலிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சிக்கல்! யாரால் தெரியுமா!

Photo of author

By Sakthi

ஐபிஎல் திருவிழா மிகக் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கின்றது , கொரோனா அச்சம் காரணமாக, வெளிநாட்டிற்கு ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளில் 60 ஆட்டங்கள் முடிந்து நேற்று இறுதி ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது இந்த அணி கடைசி ஆட்டத்தில் டெல்லியை எதிர்கொண்டது.

முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி 5 விக்கெட்டுகள் மற்றும் 8 பந்துகள் இருந்த நிலையில், வெற்றிக்கனியை பறித்து ஐபிஎல் கோப்பையை தட்டிச் சென்றது.

மும்பை அணி, இதன்மூலமாக ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாம்பியனாக ஆகியிருக்கின்றது.

இது மிகப்பெரிய சாதனை இதனை முறியடிப்பதற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் மட்டுமே இயலும்.

ஏனென்றால், சென்னை அணி மட்டுமே மூன்று முறை கோப்பையை தன் வசமாக்கி இருக்கின்றது.

மும்பை அணியிடம் தோல்வி அடைந்தது டெல்லி அணி தான். ஆனாலும் இதற்கான சிக்கல் விராட் கோலிக்கு வந்திருக்கின்றது.

மும்பை அணிக்கு சச்சின் கேப்டனாக இருந்தபோது கிடைக்காத இந்த ஐபிஎல் கோப்பை ரோகித் சர்மா தலைமையில் 5 முறை கிடைத்திருக்கின்றன இதற்கு அவருடைய கேப்டன்ஷிப் தான் காரணம் என, அழுத்தம் திருத்தமாக கூறப்படுகின்றது.

இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும் ரோகித் சர்மாவை நியமிக்கக்கோரும் குரல்கள் அதிகரித்து வருகின்றது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், பேட்டிங்கிலும், கேப்டன் ஷிப்பிலும், அசத்திக் கொண்டிருக்கும் ரோஹித் சர்மாவை இன்னும் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்காமல் இருப்பது அவமானம், என்று தெரிவித்திருக்கின்றார்.

அதற்கு ஆதரவாக பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விவகாரம் கோலிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

ஏனென்றால் சுமார் எட்டு வருட காலமாக, பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்து வரும் விராட் கோலி ஒரு முறை கூட கோப்பையை வென்று கொடுக்கவில்லை.

ஆனாலும் மைதானத்தில் வீரர்கள் அனைவரையும் விரட்டி மதத்தையும் விளையாட வைப்பார் கோலி.

நேற்றைய தினம், ரோகித் சர்மா ஊடகங்களிடம் பேசும்போது வீரர்கள் நன்றாக விளையாடியதின் காரணமாக கிடைத்த வெற்றி தான் இது. நான் மற்ற வீரர்களை மிரட்டி வேலை வாங்கும் கேப்டன் நான் கிடையாது என எரியும் தீயில் எண்ணெயை ஊற்றி இருக்கின்றார் ரோகித் சர்மா.