ரேஷன் அட்டை என்பது மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படும் நிலையில் ஒவ்வொருவரும் ரேஷன் அட்டையில் பெயர் வைத்திருப்பது அவசியம் எந்த ஒரு அரசு நலத்திட்டங்களையும் பெற வேண்டும் என்றால் ரேஷன் அட்டை கட்டாயம் வைத்திருக்க வேண்டும் ரேஷன் கார்டின் மூலம் மலிவு விலையில் மக்களுக்கு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
ஆனால் பொருட்கள் வாங்க செல்லும்பொழுது காலதாமதம் ஏற்படுகின்றது. அதனை குறைப்பதற்காக கைரேகை பதிவு மற்றும் கண் கருவிழி பதிவு உள்ளிட்ட புதிய வசதிகளை அரசு கொண்டு வந்தது. இருப்பினும் பொருட்கள் வாங்க மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் இருப்பதினால் இன்று முதல் புதிய திட்டத்தை சோதனை அடிப்படையில் தமிழகத்தில் செயல்படுத்த இருக்கின்றது.
சோதனை முயற்சியாக சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் மானிய விலையில் வழங்கப்படக்கூடிய உணவுப் பொருட்கள் வீடுகளுக்கு சென்று வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளில் நேரடியாக ரேஷன் பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டமானது இன்று முதல் வரும் ஜூலை 5ஆம் தேதி வரை சோதனை முயற்சியாக நடத்த கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இத்திட்டம் வெற்றியடைந்தால் அடுத்தடுத்து மாவட்டங்களில் செயல்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் முதியோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்