வடதமிழகத்தை வெளுத்து வாங்கப் போகும் மழை! வானிலை மையம் கொடுத்த புதிய அப்டேட்!

Photo of author

By Sakthi

வடதமிழகத்தை வெளுத்து வாங்கப் போகும் மழை! வானிலை மையம் கொடுத்த புதிய அப்டேட்!

Sakthi

Updated on:

The rain is going to whiten the North-East! A new update from the Meteorological Department!

 

தமிழகத்தில் இன்று ஓரிரு மாவட்டங்களில் லேசானது முதல் கன மழைப் பொழிய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கன மழையும் நீலகிரி, கோவை, ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், காஞ்புரம், கள்ளக்குறிச்சி, மற்றும் செங்கல்பட்டு முதலிய வட மாவட்டங்களில் கன மழை பொழிய வாய்ப்புள்ளது.

புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைபெய்ய வாய்ப்புஉள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை, தமிழகத்தில் அநேக பகுதிகளில், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும், தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்தில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

திங்கள் கிழமை, தமிழக மற்றும் புதுவை மாவட்டத்தில்  அநேக இடங்களில் லேசானது முதல் மீதமான மழை பொழிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கோவை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி மாவட்டங்களில் கனமழை பொழிய வாய்ப்புள்ளது. இன்று முதல் இரண்டு நாட்களுக்கு வடதமிழக மாவட்டங்களில் மழைபொழியும் என்ற தகவல் வெளியாகியுள்ளது .