2023 டிசம்பருக்குள் அயோத்தியில் ராமர் கோவில் முழுமையடையும்! கட்டுமான குழு வெளியிட்ட புதிய தகவல்!

Photo of author

By Sakthi

2023 டிசம்பருக்குள் அயோத்தியில் ராமர் கோவில் முழுமையடையும்! கட்டுமான குழு வெளியிட்ட புதிய தகவல்!

Sakthi

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீ ராமருக்கு கோவில் கட்டும் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பமானது இந்த நிலையில் கோயில் கட்டுமான கமிட்டியின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா வெளியிட்ட அறிக்கையில் அவர் சில விஷயங்களை குறிப்பிட்டுள்ளார்.

ராமர் கோவிலில் கிரானைட் கற்கள் கொண்டு பீடமமைக்கும் பணி பிப்ரவரி மாதம் ஆரம்பமானது. ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்திருக்கிறார்.

மேலும் பீடம் கட்ட சுமார் 17000 கற்கள் பயன்படுத்தப்படும் கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்து கற்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கிவரும் கன்டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா கிரானைட் கற்களை கொண்டு செல்வதற்கு உதவி புரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் 3 அடுக்குகளைக் கொண்ட கோவில் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்று வருகின்றன. கருவறை அமைக்கும் பணி முடியும் தருவாயில் இருக்கிறது.

கீழ்தளத்திலுள்ள கருவறை டிசம்பர் மாதம் 2023ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும். மீதமுள்ள பணிகள் டிசம்பர் மாதம் 2024 ஆம் வருடத்திற்குள் முடிவடையும் என தெரிவித்திருக்கிறார்.

கோவில் அடித்தளம் மற்றும் தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்து விடும், கோபுரம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாகும் என்றும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோவில் கட்டுவதற்கு 300 முதல் 400 கோடி ரூபாய் வரையில் செலவாகலாம் என தெரிவிக்கப்பட்டது.

அங்குள்ள மொத்த 70 ஏக்கர் நிலத்தின் வளர்ச்சிக்கான செலவு 1,100 கோடியை தாண்டும்,என்று ராம ஜென்மபூமி அறக்கட்டளையின் பொருளாளர் சுவாமி கோவிந்த் தேவகிரி மகராஜ் தெரிவித்தார்.

கோவில் கட்ட பொது மக்களிடம் நிதி திரட்டியதன் மூலமாக 2100 கோடிக்கு மேல் வசூலாகி இருப்பதாகவும் அறக்கட்டளை தெரிவித்திருக்கிறது.