PMK: இன்னும் இரண்டு மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் அனைத்து கட்சிகளும் மும்முரம் காட்டி வரும் வேளையில் பாமகவில் மட்டும் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்ட தலைமை பிரச்சனை தற்போது வரை தீர்ந்த பாடில்லை. இது அண்மை காலமாக உச்சத்தை எட்டிய நிலையில், நிறுவனர் ராமதாஸ் புதிதாக ஒரு செய்தியை கூறியுள்ளார். அன்புமணி ஆதரவு எம்எல்ஏ-க்கள் மூன்று பேரை கட்சியிலிருந்து நீக்க உத்தரவு பிறப்பித்துள்ள அவர் இன்னும் சில முக்கிய முடிவுகளையும் கூடிய விரைவில் அறிவிப்பார் என்று பாமகவின் மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர். தேர்தல் நெருங்கும் சமயத்தில் பாமக இரண்டாக பிரிந்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்சியின் தலைவராக அன்புமணி இருந்த நிலையில், இளையரணி தலைவராக ராமதாசின் பேரன் முகுந்தன் நியமிக்கப்பட்டார். இதில் விருப்பமில்லாத அன்புமணி அவரது எதிர்ப்பை மேடையிலேயே வெளிப்படுத்தியிருந்தார். அப்போது ஆரம்பித்த மோதல் டெல்லி உயர்நீதி மன்றம் வரை சென்று விட்டது. ராமதாஸுக்கு எதிராக அன்புமணி சில செயல்பாடுகள் செய்து வந்ததால் அவர் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து தேர்தல் ஆணையம் சென்ற அன்புமணிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. இதனால் ராமதாஸ் இதனை சட்ட ரீதியாக எதிர்கொள்வதாக கூறி டெல்லி உயர் நீதிமன்றம் செல்ல, அங்கும் அன்புமணிக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது. அன்புமணி தான் தலைவர் என்பதை மறுக்காத நீதிமன்றம், பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்க உத்தரவிட்டது.
இவ்வாறான நிலையில் தான், அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், ராமதாசின் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும் போன்ற செயல்கள் அங்கேறி வந்தன. அந்த வகையில், தற்போது அன்புமணியின் ஆதரவு எம்எம்ஏ-க்களான மயிலம் சட்டமன்ற உறுப்பினர் .ச.சிவகுமார், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். சதாசிவம், தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்பி. வெங்கடேஸ்வரன் ஆகிய 3 மூன்று பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கபட்டு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகலிளிருந்தும் நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். இந்த நிகழ்வு அன்புமணிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் என்றும் பலரும் கூறுகின்றனர்.