Boomer Uncle: தற்போது சமூக வலைதளங்கள் போன்றவற்றில் இந்த பூமர் அங்கிள், கிரிஞ்ச் போன்ற சொற்களை பயன்படுத்துவதை நாம் பார்த்துக்கொண்டு தான் வருகிறோம். அந்த வகையில் சமீப காலமாக இந்த பூமர் அங்கிள் என்ற வார்த்தை அதிக அளவு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. யாராவது அட்வைஸ் கொடுத்துவிட்டால் போதும் அவர்களை உடனே பூமர் அங்கிள் என்று விளாசிவிடுகிறார்கள்.
பொதுவாக ஒரு நபர் தங்களை பற்றி பெருமையாகவும், மற்றவர்களுக்கு அவரின் வாழ்க்கையை முன்னுதாரணமாக வைத்தும் ஏதாவது அட்வைஸ் கூறினால் அவர்களை இந்த காலத்து இளைஞர்கள் பூமர் என்று தெரிவித்துவிடுகின்றனர். அட்வைஸ் கொடுப்பவர்களின் மனது புண்படாதவாறு மிகவும் நாசுகாக இவர்கள் கலாய்த்துவிடுகின்றனர்.
பூமர் என்ற சொல்
பூமர் என்பது பூம் அதாவது ஆங்கிலத்தில் Boom என்ற சொல்லில் இருந்து தான் வந்ததாக கூறப்படுகிறது. பூம் என்றால் மிகுதியாக அல்லது அதிகமான என்பது பொருள். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு மக்கள் தொகை அதிகமாக பெருக்கெடுத்தது. அதவாது 1946 முதல் 1964 வரையிலான காலக்கட்டத்தில் குழந்தைப்பிறப்புகளின் விகிதம் அதிகரித்திருந்தது. மக்கள் தொகை பெருகியதால் அப்பாேது மக்கள் தொகை “பூம்” ஆகிவிட்டது என்று கூறினார்கள். மேலும் அந்த காலக்கட்டத்தில் பிறந்த குழந்தைகளை “பேபி பூமர்ஸ்” என்றும் அழைத்தார்கள்.
பூமர் பாப்புலர் ஆனது எப்போது?
2018 ஆம் ஆண்டில் டிக்டாக்கில் ஒரு சிறுவனிடம் அட்வைஸ் செய்துள்ளார் ஒரு வயதானவர். அதற்கு அந்த சிறுவன் Ok Boomer என்று எழுதி காண்பித்து செல்வான். அப்பொழுது முதல் இந்த வீடியோ வைரல் ஆனது.
பிறகு ஒருமுறை நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் ஒரு 25 வயதுடைய க்லோயி சுவார்பிரிக் உறுப்பினர் ஒருமுறை காலநிலையை பற்றி பேசும் போது, எதிர்காலத்தை பற்றி நாடாளுமன்றத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு கவலையே இல்லை என்று
கூறி பேசினார். அப்போது அவருக்கு அட்வைஸ் செய்யும் தோணியில் பேசிய ஒருவரை பார்த்து க்லோயி சுவார்பிரிக் ’ஓகே பூமர்’ என்று கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
மேலும் படிக்க: ஓ இதான் விஷயமா? பாம்பின் விஷத்தில் இருந்து கீரி தப்பிக்க காரணம் இதுவா?