அதிரவைக்கும் காரணம்! திமுக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகி!

Photo of author

By Pavithra

அதிரவைக்கும் காரணம்! திமுக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகி!

Pavithra

அதிரவைக்கும் காரணம்! திமுக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய திமுக நிர்வாகி!

நெல்லையில் போட்டி காரணமாக திமுக பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக மற்றொரு திமுக நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்ததால் பரபரப்பு

நெல்லையில் கேபிள் டிவி நடத்தி வரும் மாரியப்பன் என்பவர் திமுகவின் நெல்லை மத்திய மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளராக பொறுப்பு வகித்து வருகின்றார்.சில நாட்களுக்கு முன்பு மாரியப்பன் தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருக்கும் பொழுது முகம் தெரியாத மர்ம நபர் ஒருவர் இரும்பு கம்பியால் அவரை கொலை செய்யும் எண்ணத்தில் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இந்த தாக்குதல் குறித்து மாரியப்பன் சார்பில் காவல்துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டது.புகாரின் பெயரில் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்தன.மாரியப்பனை தாக்கியது திமுகவை சேர்ந்த மற்றொரு நபரே என்பது தெரியவந்தது.இந்த கொலை முயற்சி தொடர்பாக நெல்லைப் பகுதி திமுக செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட 3 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த தாக்குதல் குறித்து சுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தியபோது,மாரியப்பன் கொரோனா ஊரடங்கு காலத்தில் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்தார்,இதனால் அவருக்கு வார்டு உறுப்பினராக திமுக சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என பேசப்பட்டது.எனவே தனக்கு போட்டியாக மாரியப்பன் வந்து விடக்கூடாது என்பதனால் சுப்பிரமணியம் அவரை கொடூரமாக தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.