லஞ்ச ஒழிப்புத் துறையால் கையும் களவுமாக பிடிபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்!

0
120

லஞ்ச ஒழிப்புத் துறையால் கையும் களவுமாக பிடிபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்!

 

செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகத்திற்கு அருகே உள்ள சீனிவாசன் என்பவர் புதிதாக வீடு கட்ட திட்டமிட்டு உள்ளார்.புதிய வீடு கட்டுவதற்கான அனுமதி சான்றை பெற,அப்பகுதி வட்டார வளர்ச்சி அலுவலரான கல்யாணியிடம் சென்றுள்ளார்.அவர் புதிதாக வீடு கட்டுவதற்கு சான்று
தரவேண்டுமென்றால் ஐந்தாயிரம் ரூபாய் பணம் வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில்,புதிதாக வீடு கட்ட அனுமதி வேண்டும் என்று, சீனிவாசன் என்பவர் வட்டார வளர்ச்சி அலுவலர் கேட்ட பணத்தை கொடுக்க முயன்று உள்ளார்.அப்பொழுது சீனிவாசனிடம்,கல்யாணி பணம் வாங்கும் பொழுது,மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கல்யாணியை கைது செய்தனர்.மேலும் அவரிடம்,இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறையால் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

 

 

Previous articleமுதன் முதலாக இந்த பதவியில் கடற்படை முன்னாள் தளபதியா?
Next articleஅரசுத்  தேர்வுக்காக தயார் செய்வோருக்கான குட் நியூஸ்!!