நமது நெருங்கிய உறவினரோ அல்லது நண்பர்களோ அவர்களது அவசர தேவைக்கு என நம்மிடம் வந்து கடனாக பணம் கேட்கும் பொழுது, நம்மிடம் உள்ள பணத்தை கொடுத்து இருப்போம். அவ்வாறு பணம் இல்லை என்றாலும் கூட நமது நகையை அடகு வைத்து பணமாக கொடுத்து இருப்போம் அல்லது நகையை கொடுத்து உதவி இருப்போம். அவர்களின் அவசர சூழ்நிலை என நமது மனம் தாங்காமல் பணமோ, நகையோ கொடுத்து உதவியிருப்போம்.
ஆனால் அதனை ஒரு சிலர் கொடுக்க நினைத்தாலும் கூட கொடுக்கக்கூடிய சூழ்நிலை அவர்களுக்கு அமையாமலே போயிருக்கலாம். ஆனால் ஒரு சிலர் கொடுக்கவே நினைத்திருக்க மாட்டார்கள். அவ்வாறு இருப்பவர்கள் நம்மை தேடி வந்து நம்மிடம் வாங்கிய பணம் மற்றும் நகையை கொடுப்பதற்கும், கொடுக்கக்கூடிய சூழ்நிலையை அவர்களுக்கு அமைத்து தருவதற்கும் என ஒரு பரிகாரத்தினை செய்வதன் மூலம் கண்டிப்பாக நமது பணம் நமது கைத்தேடி வரும்.
இந்த பரிகாரத்தினை வீட்டில் உள்ள யார் வேண்டுமானாலும் செய்யலாம். பெண்கள் மாதவிடாய் நாட்களில் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது. அதேபோன்று வீட்டில் அசைவம் செய்த பொழுதும், அசைவ உணவை உண்ட பொழுதும் இந்த பரிகாரத்தினை செய்யக்கூடாது. பிறப்பு மற்றும் இறப்பு தீட்டு இருக்கும் சமயத்திலும் இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது. இந்த பரிகாரத்தை நமது வீட்டில் மட்டுமே செய்ய வேண்டும். வேறு இடங்களில் செய்யக்கூடாது.
காலை, மாலை, இரவு போன்ற எந்த நேரங்களில் வேண்டுமானாலும் இந்த பரிகாரத்தை செய்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தினை அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் செய்வது மிகவும் சிறப்பு. இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது மேற்கு திசையை நோக்கி எவ்வாறு அமர்ந்து கொள்ள வேண்டும். ஒரு மண் அகல் விளக்கினை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் ஐந்து கற்பூரம் மற்றும் 11 கிராம்புகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கிராம்பு 11 அல்லது 24 என எடுத்துக் கொள்ளலாம். 24 கிராம்புகளை எடுத்துக் கொண்டால் இன்னும் மூன்று கற்பூரம் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த மண் அகல் விளக்கில் ஐந்து கற்பூரத்தை போட்டு பற்ற வைக்க வேண்டும். கிராம்புகளை நமது இடது கையில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு கிராம்பாக எடுத்து, யார் நமக்கு பணம் கொடுக்க வேண்டுமோ அவரது பெயர் மற்றும் கொடுக்க வேண்டிய தொகையை கூறிக் கொண்டே ஒவ்வொரு கிராம்பாக அந்த விளக்கில் போட வேண்டும். மூன்று அல்லது நான்கு பேர் நமக்கு பணம் கொடுக்க வேண்டியதாக இருந்தாலும் கூட அனைவரது பெயர்களையும் கூறி இந்த பரிகாரத்தை செய்யலாம்.
அந்த கிராம்பானது முழுவதுமாக எரிந்து முடியும் வரை அந்த இடத்தை விட்டு நாம் செல்லக்கூடாது. அதே சமயம் நமது பணம் கண்டிப்பாக நமது கைக்கு வந்துவிடுமா என்ற சந்தேகம் நமது மனதில் தோன்றக்கூடாது. கண்டிப்பாக அவர் நமது பணத்தை கொடுத்து விடுவார், அந்த பணத்தை வைத்து அடுத்து என்ன செய்யலாம் என்று தான் நம் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து அந்த கிராம்பு முழுவதுமாக எரிந்து முடிந்ததும் அதனை கால் படாத இடத்தில் அல்லது வாஷ்பேஷனில் கொட்டி விடலாம்.
இந்த பரிகாரத்தினை தொடர்ந்து 11 முறை செய்ய வேண்டும். இப்பொழுது அமாவாசை நாட்களில் இந்த பரிகாரத்தினை செய்தால், தொடர்ந்து 11 அமாவாசைகளில் செய்ய வேண்டும். பௌர்ணமி நாட்களில் செய்தால் தொடர்ந்து 11 பௌர்ணமி நாட்களில் இதனை செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து முழு மனதுடனும், நம்பிக்கையுடனும் இந்த பரிகாரத்தினை செய்யும் பொழுது கண்டிப்பாக நமது பணம் நமது கையை தேடி வரும்.