பிரபல பத்திரிகையாளருக்கு அனுமதி மறுப்பு தெரிவித்த உணவகம்! பாரம்பரிய உடை காரணம்! – வீடியோ வெளியிட்ட விவகாரம்!
டெல்லியில் பிரபல பத்திரிக்கையாளர் அனிதா சவுத்ரி ஒரு ஆடம்பர ஓட்டலுக்கு சென்று இருந்தார். அப்போது அவர் புடவை அணிந்து இருந்ததன் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாக அந்த உணவகம் மீது குற்றம் சாட்டினார். இணையதளங்களில் இது குறித்து வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார். மேலும் இது போன்ற அவமரியாதையை தான் எங்கும் சந்தித்ததில்லை என்றும், அது மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இது குறித்து ஊழியர்களிடம் அவர் பேசும் வீடியோ காட்சிகளையும் இணையத்தில் வெளியிட்டிருந்தார். இதனால் அந்த உணவக நிர்வாகத்திற்கு கடும் கண்டனங்கள் இணையத்தின் மூலம் பொதுமக்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். உணவகத்திற்கு எதிரான பல எதிர்மறை கருத்துக்களும் பரப்பப்பட்டன. ஆனால் அந்த உணவு விடுதி நிர்வாகம் இந்தக் குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்து உள்ளது.
மேலும் தற்போது அந்த ஓட்டல் நிர்வாகம் விளக்கம் ஒன்றையும் அது தொடர்பான வீடியோவையும் இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதில் அந்த ஹோட்டலுக்கு வரும் போது முன்பே நீங்கள் பதிவு செய்யவில்லை என்றும் கொஞ்சம் காத்திருங்கள் என்றும் முதலில் அமைதியாகச் சொன்னோம். பிறகு அவர்களை எங்கு அமர வைப்பது என்று ஊழியர்கள் ஆலோசித்தார்கள்.
ஆனால் அதற்குள்ளாக அவர் ரெஸ்டாரண்ட்டின் நுழைந்து, அங்கே எங்கள் ஊழியர்களுடன் சண்டை போட ஆரம்பித்துவிட்டார். அதோடு மட்டுமில்லாமல் எங்களது மேனேஜரை கை நீட்டி அறையவும் செய்தார் என்று தெரிவித்துள்ளது. மேலும் அது குறித்த வீடியோவையும் அந்த உணவகம் இணையதளத்தில் வெளியிட்டு தங்கள் மீது எந்த தவறும் இல்லை என நிரூபித்து உள்ளது.