முருகப்பெருமானுக்கு உரிய வேல் பரிகாரம்..!! கோடிக்கணக்கான கடனும் தீரும்..!!

Photo of author

By Janani

முருகப்பெருமானுக்கு உரிய வேல் பரிகாரம்..!! கோடிக்கணக்கான கடனும் தீரும்..!!

Janani

எவரும் கடன் வாங்க வேண்டும் என்ற ஆசையுடன் கடனை வாங்குவதில்லை. கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை ஒருவருக்கு ஏற்படுவதால் மட்டுமே கடனை வாங்கி விடுகின்றனர். கஷ்டப்பட்டாவது வாங்கின கடனை அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் தான் கடன் வாங்குவோம், ஆனால் அந்த கடனை அடைக்க கூடிய சூழ்நிலை நமக்கு ஏற்படாமலே போய்விடுகிறது.

குடும்பத்தில் உள்ள அனைவரும் கஷ்டப்பட்டு ஓடி ஓடி உழைத்தாலும் கூட, வீட்டை சமாளிக்கவே சரியாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் வாங்கின கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது. வாங்கின கடனை கொடுக்க முடியவில்லையே என்ற மன கஷ்டம் தினமும் இருந்து கொண்டே இருக்கும்.

கடன் கொடுத்தவரும் வாங்கின கடனை கொடுக்கவில்லையே என்ற கஷ்டத்துடன் இருப்பார்கள். இவ்வாறு இருக்கக்கூடிய சூழ்நிலையில் செவ்வாய் கிழமை அன்று முருகனை நினைத்து, முருகனுடைய வேலை வழிபட்டோம் என்றால் தீர்க்க முடியாத கடனையும் தீர்த்து விடலாம்.

இந்த முருகன் வழிபாட்டை செய்வதற்கு முருகனுடைய வேலாக நினைத்து, ஒரு சிறிய வேலை நாம் வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். செவ்வாய்க் கிழமை அன்று அதிகாலையில் அந்த வேலை நமது பூஜை அறையில் வைத்து, ஒரு மஞ்சள் நிற துணியில் நமக்கு என்ன பிரச்சனை தீர வேண்டுமோ கடன் தீர வேண்டும் என்றால், இந்த நாட்களுக்குள் எனது கடனை அடைத்து விட வேண்டும் முருகா… என எழுதி அந்த வேலில் கட்டி விட வேண்டும்.

இவ்வாறு கட்டிய பிறகு அந்த வேலை, ஒரு பாத்திரத்தில் அரிசியை நிரப்பி அந்த அரிசியில் குத்தி வைத்து விட வேண்டும். பிறகு அதே செவ்வாய்க்கிழமை அன்று மாலையில் தீபம் ஏற்றி, அந்த வேலிற்கு அபிஷேகம் செய்ய வேண்டும். அபிஷேகம் செய்யும்பொழுது நாம் கட்டியிருந்த மஞ்சள் துணியை கழட்டி வைத்துவிட்டு, ஜவ்வாது மற்றும் மஞ்சளை கொண்டு அபிஷேகம் செய்ய வேண்டும்.

அபிஷேகம் செய்யும் பொழுது நமக்கு என்ன பிரச்சனை தீர வேண்டுமோ அந்த பிரச்சனையை மனதில் நினைத்துக் கொண்டு, முருகா எனக்கு இந்த பிரச்சனையை தீர்த்துக் கொடு எனக்கு நீயே துணை என்று மனதார முருகனை வேண்டிக் கொள்ள வேண்டும்.

முருகனை வழிபடும் பொழுது முருகனின் நாமங்கள் எதையேனும் கூறிக் கொள்ளலாம், அல்லது “ஓம் முருகா” என்ற எளிய நாமத்தை நாம் மனதார நினைத்துக் கொண்டாலே போதுமானது. அபிஷேகம் செய்யும் பொழுது நாம் பயன்படுத்தக்கூடிய ஜவ்வாது மற்றும் மஞ்சளை பன்னீருடன் கலந்து அபிஷேகம் செய்ய வேண்டும்.

‘முருகனை நம்பினோர் கைவிடப்படார்’. எனவே நமது வேண்டுதல் நிறைவேறும் வரையில் இந்த பரிகாரத்தை வாரந்தோறும் செவ்வாய்க் கிழமையில் செய்து கொள்ளலாம். நமது வேண்டுதல் நிறைவேறிய பிறகும் இந்த வேலை வைத்து அபிஷேகம் செய்வது சிறப்பு. அபிஷேகம் செய்த பின்னர் நமது வேண்டுதலை எழுதி வைத்த மஞ்சள் துணியை மீண்டும் வேலில் கட்டி விடலாம்.

இந்த எளிய பரிகாரத்தை வாரந்தோறும் செவ்வாய்க் கிழமையில் செய்து பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும். பணவரவு ஏற்படும், கடன் தொல்லை நீங்கும், வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும், குடும்பம் முன்னேற்றம் அடையும்.