போலீசிடம் இருந்து தப்பித்து ஓடிய காதல் ஜோடி! பிடித்து கொடுத்த பொதுமக்கள்!

போலீசிடம் இருந்து தப்பித்து ஓடிய காதல் ஜோடி! பிடித்து கொடுத்த பொதுமக்கள்!

சிவமொக்கா அருகே ஓச நகர் அருகே சினிமா பாணியில், போலீசிடம் இருந்து தப்பி ஓடிய காதல் ஜோடி. அவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாசன் மாவட்டம் பேளூரில் முஜாயித்தீன் என்ற வாலிபர் வசித்து வருகிறார்.

அவருக்கும் அதே பகுதியில் வசித்து வந்த ஒரு இளம் பெண்ணுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து காதலை வளர்த்துள்ளனர். இந்நிலையில் அவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதன் காரணமாக இருவரும் வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளனர். அதன் காரணமாக அவர்கள் சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓடியும் விட்டனர்.

இதனையடுத்து மாயமான இளம் பெண்ணின் பெற்றோர் போலீசாரிடம் தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் மனு ஒன்றை அளித்தனர். அதன்பேரில் போலீசார் அந்த பெண்ணை தேடிவந்தனர். மேலும் பெற்றோரிடமிருந்து அந்த பெண்ணின் தொலைபேசி எண்ணையும் வாங்கி வைத்திருந்தனர்.

அந்த எண்ணின் மூலமாக, செல்போன் டவரின் மூலம் அவர் எங்கிருக்கிறார் என்பதை அறிவதற்காக ஆய்வுகளை மேற்கொண்டனர். அப்போது ஷிவமொக்கா மாவட்டம் ரிப்பன்பேட்டை பகுதியில் அந்த எண்ணிலிருந்து அழைப்பு பதிவானதை அடுத்து, போலீசார் கடந்த திங்கட்கிழமை இருக்கும் இடத்தை அறிந்தனர். எனவே அப்பகுதிக்கு விரைந்து சென்று  விசாரணை மேற்கொண்டு காதலர்கள் இருந்த இடத்தைக் கண்டறிந்து, அவர்களை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அப்போது போலீஸ் ஜீப்பில் செல்லும் போது அந்த காதல் ஜோடி தங்களை பிரித்து விடுவார்கள் என நினைத்து தப்பி செல்ல முடிவு செய்தனர். எனவே ஓடும் ஜீப்பில் இருந்து கீழே குதித்து சாலையில் வேகமாக ஓடினார்கள். அவர்களை போலீசாரும் விடாமல் துரத்திச் சென்றனர். தப்பி ஓடிய காதல் ஜோடியை கண்ட பொதுமக்கள் அவர்களை திருடர்கள் என நினைத்து பிடித்து வைத்தனர்.

அதன்பின் பொதுமக்களிடம் தங்களது காதலை விளக்கிக் கூறிய ஜோடி எங்களை வாழவிடுங்கள் என்றும் கூறியுள்ளனர். அதைக் கேட்ட பொதுமக்கள் திகைத்து விட்டனர். அவர்களை விரட்டி வந்த போலீசார் அங்கு வந்து சம்பவம் பற்றி பொது மக்களிடம் கூறி விட்டு அவர்களை மீண்டும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகிறார்கள். சினிமா பாணியில் நடைபெற்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Comment