சுயச்சைகளின் தயவால் நகராட்சியை கைப்பற்றிய ஆளும் தரப்பு!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் தரப்பு பல முறைகேடுகளில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக குற்றம்சாட்டியது.

அதோடு சென்னையில் கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவைச் சேர்ந்த ஒருவரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் தற்சமயம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில், தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில், அனைத்து மாநகராட்சிகளிலும் திமுக வெற்றிபெற்றிருக்கிறது. அதோடு மட்டுமல்லாமல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சியை சுயேச்சைகள் ஆதரவு காரணமாக, திமுக கைப்பற்றியிருக்கிறது.

வந்தவாசி நகராட்சியில் மொத்தமுள்ள 24 வார்டுகளில் திமுக 9 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற 10 பேரில் 6 பேர் ஆதரவு கொடுத்ததால் நகராட்சியை திமுக கைப்பற்றியது.