எஸ் 400 விவகாரம்! இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா?

Photo of author

By Sakthi

ரஷ்யாவிடமிருந்து 5 எஸ் 400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்குவதற்கு இந்தியா ஒப்பந்தம் செய்து இருக்கிறது 5.5 பில்லியன் டாலர் மதிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.   எஸ் 400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு தரையிலிருந்து வானில் வரும் இலக்குகளை 400 கிலோ மீட்டர் தொலைவிலேயே மிகத் துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது என சொல்லப்படுகிறது.

இதற்கு இடையில் எஸ்-400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு இந்தியாவிற்கு வினியோகம் செய்யும் பணியை ரஷ்யா தொடங்கியிருக்கிறது திட்டமிட்டபடி இந்தியாவிற்கு எஸ்-400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு வினியோகம் ஆரம்பித்து நடந்து வருவதாக ரஷ்ய அதிகாரி கடந்த 14ஆம் தேதி தெரிவித்தார்.

அதேநேரம் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எஸ்-400 ரக ஏவுகணை தடுப்பு அமைப்பு வாங்குவதற்கு ஆரம்பம் முதலே அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்தது, அதோடு இந்த விஷயத்தில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை செய்து இருந்தது, ஆனால் அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி ரஷ்யாவிடமிருந்து இந்தியா ஏவுகணை தடுப்பு அமைப்பை வாங்கியிருக்கிறது. இதன் காரணமாக இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கலாம் என்று தகவல் வெளிவந்தது. அதோடு நட்பு நாடு என்பதால் இந்தியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்கவும், வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்தது.

இவ்வாறான சூழலில் எஸ் 400 விவகாரத்தில் பொருளாதார தடை விதிப்பது இருந்து இந்தியாவிற்கு விளக்கு வழங்குவது தொடர்பாக இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

இந்தியா மீது பொருளாதார தடைவிதிக்கும் நிலை ஏற்பட்டால் அது இரண்டு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கலாம் என்பதால் அனேகமாக இந்தியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க வாய்ப்பு இல்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

அதோடு அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய ஜோ பைடன் இந்தியாவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.