தமிழக சட்டசபை கடந்த மாதம் 18ஆம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக ஆரம்பமானது.ஆகவே கடந்த மாதம் 18 ஆம் தேதி பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த இரு நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் கடந்த 24ஆம் தேதி வரை நடைபெற்றது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்ட கேள்விக்கு அமைச்சர்கள் வழங்கிய பதிலுக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில், தற்சமயம் துறைவாரியான மானியக் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக சட்டசபை கூட்டம் இன்று மறுபடியும் கூடியது முதல் நாளான இன்றைய தினம் நீர்வளத் துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது என சொல்லப்படுகிறது.
இதே பாணியில் ஒவ்வொரு நாளும் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறும் அப்போது விவாதங்கள் இடம்பெறலாம் என்று சொல்லப்படுகிறது. துறை ரீதியான முக்கிய அறிவிப்புகளை சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து வரி உயர்வு, நீட் தேர்வு விவகாரம், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, போன்ற பல்வேறு பிரச்சனைகளை சட்டசபையில் எழுப்புவதற்கு அதிமுக, பாஜக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. தற்சமயம் தொடங்கியிருக்கின்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உறுப்பினர்களின் கேள்விக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதிலளித்து வருகிறார்கள்.