கோவையில் அனைவருக்கும் காத்திருந்த அதிர்ச்சி! மருத்துவமனையில் பரபரப்பு!

Photo of author

By Hasini

கோவையில் அனைவருக்கும் காத்திருந்த அதிர்ச்சி! மருத்துவமனையில் பரபரப்பு!

கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை தமிழகத்தில் மிகுந்த பாதிப்புகளையும், விளைவுகளையும், ஏற்படுத்தி வருகிறது.பல மாற்று முறைகளை பின்பற்றினாலும், கொரோனா என்னவோ குறைந்த பாடில்லை.

இதன் காரணமாக, அரசுகள் பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் அனைவரும் இரவு பகல் பாராமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் 108 ஆம்புலன்ஸ் சேவையும் தமிழகத்தில் தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படுவதினால், ஆம்புலன்ஸ்களில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் பயன்பாடு தேவைப்பட்டு வந்தது.

இதை தொடர்ந்து இன்று கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஆம்புலன்சில் கியாஸ் சிலிண்டர் வெடித்தது.உடனே தீ மளமளவென ஆம்புலன்ஸ் முழுவதிலும் பற்றி எரிந்தது.

தகவல் அறிந்து வெளியே நின்ற தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை வாகனம் வருவதற்குள் ஆம்புலன்ஸ் முழுவதும் பற்றி எரிந்து விட்டது.பின் தீயணைப்பு வாகனம் மூலம் தீ அணைக்கப்பட்டது.

இந்த சம்பவத்தின் போது அதில் நோயாளிகள் யாரும் இல்லாத காரணத்தினால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.இந்த சம்பவம் குறித்து அந்த மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.