விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!!

0
278
The shooting of Chandramukhi 2, which was going on briskly, has been completed!!
The shooting of Chandramukhi 2, which was going on briskly, has been completed!!

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!!

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக சந்திரமுகி 2 படக்குழு ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இந்த தகவலை அறிவித்துள்ளது.

இயக்குநர் பி வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் பிரபு, நடிகை ஜோதிகா, நடிகை நயன்தாரா, நடிகர் வடிவேலு, நடிகர் நாசர், நடிகர் சோனு சூட் மற்றும் பலர் நடித்த சந்திரமுகி திரைப்படம் 2005ம் ஆண்டு வெளியானது. சந்திரமுகி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.இந்த சந்திரமுகி திரைப்படம் மலையாளத்தில் வெளியான மணிசித்தராதஹு திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் பி வாசு அவர்கள் 18 வருடங்களுக்கு பிறகு சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க முடிவு செய்தார்.தற்போது இயக்குநர் பி வாசு அவர்கள் சந்திரமுகி 2  திரைப்படத்தின் படப்பிடிப்பையும் முடித்துவிட்டார்.

இந்த சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் வேட்டையன் கதாப்பாத்திரத்திலும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.மேலும் நடிகர் வடிவேலு, நடிகை லக்சுமி மேனன், நடிகை ஸ்ருஸ்டி தாங்கே, நடிகை மஹிமா நம்பியார், நடிகை ராதிகா சரத்குமார், நடிகர் ரவிமரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்திற்கு இசை அமைத்த எம்.எம் கீரவாணி அவர்கள் சந்திரமுகி 2 திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள சந்திரமுகி 2 திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக சந்திரமுகி 2 படக்குழு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Previous articleமின்சார வாரியத்தின் கடுமையான எச்சரிக்கை!! இனிமேல் இவர்களுக்கு சம்பளம் இல்லை!!
Next articleமுக்கியமான கட்சியில் இருந்து நடிகர் விஜய்க்கு வந்த அரசியல் அழைப்பு!! ஏற்றுக் கொள்வாரா நடிகர் விஜய்!!