கரும்பு ஜூஸில் எச்சில் துப்பி கொடுத்த கடைக்காரர்! உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த அருவருப்பான சம்பவம்! 

0
122
#image_title
கரும்பு ஜூஸில் எச்சில் துப்பி கொடுத்த கடைக்காரர்! உத்திரப் பிரதேச மாநிலத்தில் நடந்த அருவருப்பான சம்பவம்!
உத்திரப் பிரதேச மாநிலத்தில் கரும்பு ஜூஸ் குடிக்க வந்த தம்பதிக்கு கடைக்காரர் கரும்பு ஜூஸில் எச்சில் துப்பி கொடுத்த அருவருப்பான செயல் பொது மக்களிடையே மிகப்பெரிய கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
உத்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் ஒரு நபர் தன்னுடைய மனைவியுடன் கரும்பு ஜூஸ் குடிக்க கரும்பு ஜூஸ் கடைக்கு வந்துள்ளார். அப்பொழுது அந்த நபர் இரண்டு கரும்பு ஜூஸ் சொல்லியிருக்கிறார்.
இதையடுத்து கரும்பு ஜூஸ் கடைக்காரர் இரண்டு கரும்பு ஜூஸ் தயார் செய்து அதில் எச்சில் துப்பி கலந்து அந்த தம்பதிக்கு கொடுத்துள்ளார். கரும்பு ஜூஸில் எச்சை துப்பியதை பார்த்த நபர் கரும்பு ஜூஸ் கடைக்காரரை வன்மையாக கண்டித்துள்ளார்.
ஆனால் தாம் தவறான செயலை செய்தோம் என்று தவறை உணராத அந்த கரும்பு ஜூஸ் கடைக்காரர் அந்த நபரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட அந்த நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து காவல் துறையும் உடனடியாக நடவடிக்கை எடுத்தது. அதாவது அந்த கரும்பு ஜூஸ் கடைக்கு வந்த காவலர்கள் உடனடியாக அந்த கரும்பு ஜூஸ் கடைக்காரரையும், கடையில் பணி புரிந்தவரையும் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பெயரில் கைது செய்யப்பட்ட அந்த நபர்களை விசாரணை செய்தனர். அப்பொழுது அவர்களின் பெயர் ஷாஹப் ஆலம், ஜாம்செட் கான் என்பதும் இவர்கள் உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பஹ்ரைச்சில் வசித்து வந்தனர் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து இவர்களை தற்பொழுது காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதே போல சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவில் சலூன் கடைக்காரர் எருவர் தன்னுடைய கடைக்கு முடிவெட்ட வந்தவரின் முகத்தில் எச்சில் துப்பி பின்னர் அவருக்கு மசாஜ் செய்து விடுவது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த வீடியோ வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.