
DMK CONGRESS: சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் திராவிட கட்சிகள் கூட்டணியை பலப்படுத்தவும், மக்கள் மனதில் இடம் பெறவும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தற்போது அதிமுக கூட்டணியில் பல்வேறு முக்கிய தலைவர்களின் பிரிவும், பதவி நீக்க நடவடிக்கைகளும் அரங்கேறி வருகிறது. இதனால் மக்களுக்கு அதிமுகவின் மேலிருந்த நம்பிக்கை குறைய தொங்கியது. இதனை கண்ட திமுக தனது கூட்டணியை பலமாக வைத்துக்கொள்ள முயற்சித்து வருகிறது.
திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி போன்றவரை தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிக தொகுதிகளை கேட்டும், ஆட்சியில் பங்கு என்றும் திமுக தலைமையை வலியுறுத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ். அழகிரி ஆட்சியில் பங்கெடுப்பது உறுதி என்று தெரிவித்திருந்தார். இவரை தொடர்ந்து, விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் கூட்டணியில் எங்களுக்கு 2 சீட்டுகள் மட்டுமே ஒதுக்கபட்டிருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார். இதன் சூடு கூட தணியாத நேரத்தில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாகூர் கூட்டணி கட்சிகளுக்காக காங்கிரஸ் செய்த உதவி போதுமென்று நினைக்கிறேன் என்று கூறினார்.
தற்போது புதிய திருப்பமாக, விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாணிக்கம் தாகூர் சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில், காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா என்பதை தலைமை தான் முடிவு செய்யும் என்று கூறிய அவர், அதிக தொகுதிகளை பெற வேண்டுமென்பது காங்கிரஸ் கட்சியிலுள்ள அனைவரது விருப்பம் என்றும் கூறினார். மேலும் கூட்டணியில் விட்டு கொடுப்பது மட்டும் காங்கிரஸின் வேலை கிடையாது. காங்கிரஸ் கட்சிக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும். எங்களை மதிக்காவிட்டால், முதலமைச்சராக வர முடியாது. நிலைமை வேறு மாதிரி இருக்கும் என்று எச்சரித்தார்.
