TVK முதல்  DMK  வரை தொடரும் “கடவுளே அஜித்தே” !! முதல்வர் மு.க. ஸ்டாலின் முன் மாணவர்கள் எழுப்பிய கோஷம்!!  

Photo of author

By Sakthi

TVK முதல்  DMK  வரை தொடரும் “கடவுளே அஜித்தே” !! முதல்வர் மு.க. ஸ்டாலின் முன் மாணவர்கள் எழுப்பிய கோஷம்!!  

Sakthi

The slogan "Code Agide" was raised by the students at the program attended by CF Minister M. K. Stalin is Koen Viral

DMK-TVK:கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் மாணவர்கள் “கடவுளே அஜித்தே” என்ற கோஷத்தை எழுப்பியது வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் அவர்கள் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்தினார். இது வெற்றி மாநாடாக அமைந்து. இந்த மாநாட்டு  மேடையில் விஜய்   தவெக கட்சி கொள்கைகள் பற்றி உணர்ச்சிப் பெருக்க பேசிய இருக்கிறார். மேலும் விஜய் தனது பேச்சில் சிறிது  இடைவெளி  விட்ட உடன்  “கடவுளே அஜித்தே” என்ற கோஷம்  மாநாட்டு திடலில் தொண்டர்கள் மத்தியில் ஒலிக்க தொடங்கி இருக்கிறது.

இதை விஜய் அவர்கள் நடப்பை பற்றி  பேசுங்கள் என்று சொல்லி கடந்து இருப்பார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வைரலாகி வந்தது. இந்த நிலையில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு நலத்திட்டங்கள் செய்ய வருகை புரிந்தார். மேலும் தமிழ் புதல்வன் திட்டத்தை அறிமுகப்படுத்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று இருந்தார்கள்.

எனவே நிகழ்ச்சியின் தொடக்கமாக முதல்வர் மு.க. ஸ்டாலின்  மேடைக்கு வரும் போது “கடவுளே அஜித்தே” என்ற கோஷத்தை மாணவர்கள்  எழுப்பி இருக்கிறார்கள். இது அந்த நிழச்சியில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த செயலுக்கு பலரும் கண்டம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திர நடிகராக இருப்பவர் அஜித், இவரின் ரசிகர்கள் என்ற பெயரில் பொது வெளியில் இது போன்ற அநாகரீக செயலில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது. மேலும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் கிரிக்கெட் வீரர் மொயின் அலியிடம் அஜித் ரசிகர்கள் படத்தின்  அப்டேட் கேட்டதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.