நாட்டையே உலுக்கும் நோய்த்தொற்று பரவல்! எங்கே தெரியுமா?

Photo of author

By Sakthi

நாட்டையே உலுக்கும் நோய்த்தொற்று பரவல்! எங்கே தெரியுமா?

Sakthi

இந்தோனேசியாவில் சென்ற சில தினங்களாக நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருகிறது அங்கு ஒரு நாளைய நோய் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உலக அளவில் நோய் தொற்று பாதிப்பு அடைந்தவர்களின் பட்டியலில் இந்தோனேசியா 14வது இடத்தில் இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், இந்தோனேசியாவில் நேற்றைய தினம் ஒரே நாளில் 20 ஆயிரத்து 750 பேருக்கு புதிதாக நோய் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலமாக அங்கே நோய்த்தொற்று பரவல் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் அங்கு ஆயிரத்து 739 பேர் இந்த நோயினால் பலியாகி இருக்கிறார்கள். இதனை அடுத்து ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.8 லட்சத்தை கடந்து இருக்கிறது.

நோய்த்தொற்று பரவலில் இருந்து 31.29 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து இருக்கிறார்கள் அதோடு 4.48 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.