தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் மெல்ல ,மெல்ல, அதிகரித்து வருகின்ற நிலையில், அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது.
இதனால் மீண்டும் தமிழ்நாடு முழுவதும் அனைவரும் மொக்க கவசம் அணிவதை பின்பற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில், மதுரையில் உருமாறிய நோய் தொற்று பரவல் மேகமெடுத்து குடும்பம் குடும்பமாக பரவத் தொடங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
நேற்று புதிதாக 51 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேநேரம் 12 பேர் இந்த நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.
அரசு மருத்துவமனை ரயில்வே மருத்துவமனையில் தலா ஒருவர் தனியார் மருத்துவமனைகளில் 23 பேர் உள்ளிட்டோர் சிகிச்சையில் இருக்கிறார்கள் வீட்டுத் தனிமையில் 267 பேர் இருந்து வருகிறார்கள்.
இது தொடர்பாக மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாவது நகர்புறத்தில் 75% கிராமபுரத்தில் 25 சதவீதமும், இந்த நோய் பொதுமக்களை பாதித்திருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
அதோடு மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றத்தில் இந்த நோய் தொற்று பரவல் அதிகரித்திருக்கிறது 60 வயதிற்கும் மேற்பட்டோர் அச்சத்தின் காரணமாக, மருத்துவமனையில் சேர்ந்திருக்கிறார்கள்.
அறிகுறிகளுள்ள மற்றும் அறிகுறிகளற்ற அதோடு காய்ச்சல் நோயாளிகள் 500 பேருக்கு நாள்தோறும் சளி பரிசோதனை செய்யப்படுகின்றது. தினசரி நோய் தொற்று பாதிப்பு 50 ஆக அதிகரித்து இருக்கிறது.
கூட்டமான பகுதிகளுக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் வெளியில் செல்லும்போது அணிந்து சமூக இடைவேளையை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.