TAMILNADU:தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து உள்ளார் இலங்கை அதிபர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் மேற்கொள்வது என்பது நெடுங்காலமாக இருந்து வரும் பிரச்சனை ஆகும். குறிப்பாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இதனால் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை எல்லைக்குள் வந்து மீன் பிடித்ததாக ராணுவத்தால் சுடப்படுவது. அந்த மீனவர்களை கைது செய்தது இலங்கை சிறையில் அடிப்பது, மீனவர்களின் படகுகள் மற்றும் மீன் பிடிப்பதற்கான வலையை சேதப்படுத்துவது என பிரச்சனை தொடர்கதையாக இருக்கிறது.
மேலும் அரசியல் தலைவர்களின் தலையீடுகள் இருப்பினும் இந்த பிரச்சனைக்கு முழுமையான தீர்வு கொண்டுவரப்படவில்லை.அந்த வகையில் இலங்கை புதிய அதிபர் பதவி ஏற்றுள்ள அனுரகுமார திசநாயக்க தமிழக மீனவர்கள் மீது எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது இலங்கை அமைச்சரவையில் பேசும் போது எல்லை தாண்டி வந்து மீன்பிடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதனால் இலங்கை எல்லைக்குள் தமிழக மீனவர் வருவது தடுக்கப்படும் என்றார்.
இதனால் சட்ட விரோதமாக மீன் பிடித்தல், இலங்கை கடல் வளங்களை பாதுகாக்க முடியும்.இதை தடுக்காவிட்டால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் என்று தெரிவித்தார். தமிழக அரசும் இந்தய அரசும் தமிழ மீனவர்களின் பிரச்சனையை போர் கால அடிப்படையில் முழு தீர்வை கொண்டு வர வேண்டும் என்பது தான் மக்கள் கோரிக்கையாக இருக்கிறது.