தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் வெளியிட்ட அறிக்கை! சொந்தக் கட்சியினரே நகைத்த கொடுமை!

Photo of author

By Sakthi

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் வெளியிட்ட அறிக்கை! சொந்தக் கட்சியினரே நகைத்த கொடுமை!

Sakthi

ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை செய்ய அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை தீர்ப்பல்ல, அது ஒரு பரிந்துரை மட்டுமே என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர்க்கு உடல்நிலை சரியில்லாத போது அவரை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்ல மருத்துவ வசதியுடன் கூடிய விமானத்தை ஏற்பாடு செய்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அதன் காரணமாக எம்ஜிஆர் உயிர் பிழைத்தார்.

அதேபோன்று தற்போதும் பிரதமரோ அல்லது மாநில அரசில் இருக்கின்ற அமைச்சர்களோ ஏதாவது ஒரு நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம். அதாவது பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு போதிய வசதிகள் செய்து கொடுத்திருந்தால் அவர் உயிர் பிழைத்திருப்பார் என்று தெரிவித்தார்.

ஆனால் நேற்று இவருடைய அறிக்கை வெளியானவுடன் அதனை படித்து காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்களே குபீர் என்று சிரிக்க தொடங்கினார்கள்.