தமிழ்நாட்டில் மருத்துவ படிப்பிற்கான பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க கோரி தமிழக அரசு சார்பிலும் மற்றும் திமுக அதிமுக பாமக போன்ற முக்கிய கட்சிகளின் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டினை இந்த வருடமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ் அஜய் ரஸ்தோகி ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்திய அளவிலான ஒதுக்கீட்டு இடங்களில் மற்ற பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டினை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமல் படுத்துவதற்கான சாத்தியக் கூறு இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
50 சதவீத இட ஒதுக்கீட்டினை இந்த வருடம் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது சம்பந்தமாக எழுத்துப்பூர்வ வாதம் தமிழக அரசியல் கட்சியினர் சார்பிலும் மற்றும் தமிழக அரசு சார்பிலும் தாக்கல் செய்யப்பட்டன இந்த வழக்கில் இன்றைய தினம் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் இந்த 50 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த வருடம் அமல்படுத்த இயலாது என்று தெரிவித்திருக்கின்றது.