தலீபான்கள் சட்ட விரோதமான செயலை செய்கின்றனர்! – அகமது மசூத்!

Photo of author

By Hasini

தலீபான்கள் சட்ட விரோதமான செயலை செய்கின்றனர்! – அகமது மசூத்!

Hasini

The Taliban are committing an illegal act! - Ahmed Masood!

தலீபான்கள் சட்ட விரோதமான செயலை செய்கின்றனர்! – அகமது மசூத்!

ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகள் தலீபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், பஞ்ச்ஷீர் பகுதி மட்டும் இன்னும் தலிபான்களை எதிர்த்து வலுவோடு போராடி வருகின்றனர். இதனை தொடர்ந்து ஒட்டு மொத்த பஞ்ச்ஷீர் மாகாணத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

ஆனால் தலிபான்கள் எதிர்ப்பு கூட்டணியின் முக்கிய தலைவர்கள் என்ன ஆனார்கள் என்ற விவரங்கள் இதுவரை தெரியவில்லை. இதனிடையே இந்நிலையிலும் இடைக்கால மந்திரி சபையும், இடைக்கால பிரதமரையும் அங்கு தலிபான்கள் அறிவித்து உள்ளனர். தற்போது முந்தைய ஆட்சியின் போது அவர்களுக்கு எதிராக செயல்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களை கைது செய்தும், கொலை செய்தும் வன்மையை காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அறிவித்துள்ள இடைக்கால அரசு சட்ட விரோதமானது என்றும், இது ஆப்கானிஸ்தான் பிராந்தியம் மற்றும் உலகின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான விஷயம் என்றும் ஆப்கனின் தேசியக் கிளர்ச்சி படையின் தலைவர் அகமது மசூத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஆப்கானிஸ்தான் மக்களை தலிபான்களுக்கு எதிராக எழுச்சி பெறுவதற்கு ஒரு அழைப்பும் விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை (UN), ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை (UNHRC), ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஷாங்காயின் அமைப்பு, பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (SARC) மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு போன்ற உலகளாவிய நிறுவனங்களையும் (OIC) தலீபான்களுடன் ஒத்துழைக்கக் கூடாது என்றும் அகமது மசூத் கேட்டுக்கொண்டுள்ளார்