பெண்கள் பாடுவதற்கும் தொழுகைக்கு அனுமதியில்லை.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

Photo of author

By Sakthi

world:ஆப்கானிஸ்தானில் பெண்கள் பாடுவதற்கும், தொழுகையில் ஈடுபடுவதற்கு தடை விதித்தது தாலிபான் அரசாங்கம்.

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் ஆட்சி கட்டுப்பாட்டின் கிழ் வந்தநாள் முதல் பென்களுக்க அடக்குமுறை கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிது.
பெண்கள் கல்வி கற்கக் கூடாது, பெண்கள் ஆடைக்கட்டுப்பாடு என பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தலிபான் அரசு.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் அரசை கைப்பறி 3 ஆண்டுகள் ஆகி விட்டது.ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் பணியை அகற்றிவிட்டு தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றி இந்த மூன்று ஆண்டுகளில் நிறைவு பெற்று உள்ளது. தற்போது வரை பெண்களுக்கு எதிரான கடுப்பாட்டுகள் அதிகரித்து வருகிறது.

2021 ஆகஸ்ட் 15ஆம் தேதி தலிபான்கள் ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றினர்கள். அப்போது அப்கானிஸ்தானில் உலக நாடுகளின் துதரங்க்களை மூடினார்கள். மேலும் இந்த நாடு பொருளாதாரத்தில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. ஆப்கானிஸ்தான் மக்கள் உணவு தட்டுபாடு ஏற்பட்டு பொது மக்கள் வெறும் ரொட்டியை உண்ணும் காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது போன்ற அடிப்படை பிரச்சனைகள் இருந்த போதிலும் பெண்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிப்பதில் மும்முரமா இருந்தது தாலிபான் அரசு. அதாவது அல்லா ஹு அக்பர் என்ற தக்பீர் கோஷம் எழுப்பவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழுகைக்கு அனுமதி இல்லை, பெண்கள் பாடல் பாடவும் அனுமதி இல்லை என தாலிபான் நல்லொழுக்க துறை அமைச்சர் காலித் ஹனாஃபியின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருப்பது உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.