நீங்க ஆவின் பால் வாங்குவாங்களா? தமிழக அரசு எடுத்த முக்கிய நடவடிக்கை!!

Photo of author

By Sakthi

TAMILNADU: ஆவின் பாலகங்கள் 24 மணிநேரமும் இயங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பால் கொள்முதல் செய்து வருகிறது தமிழக அரசு. கொள்முதல் செய்த பாலை ஆவின் நிறுவனத்தின் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. ஆவின் நிறுவனம் பால் மட்டும்மல்லாது  தயிர்,வெண்ணெய் ,நெய், ஐஸ் கிரீம் என பல பால் தொடர்பான பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில் வங்கக் கடலில் புதிய புயல் உருவாக உள்ளது. இந்த புயலுக்கு சவுதி அரேபியா “Fengal” என பெயரை வைத்து உள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது. மேலும் இந்த புயலானது நாளை தமிழகத்தை நோக்கி வர உள்ளது இதனால் 12-20 செ.மீ வரை மழை பெய்யும்.

இந்த புயல்  சென்னை,திருவள்ளுவர்,காஞ்புரம்,செங்கல் பட்டு மாவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் அத்தியாவசிய பெரும்பாலான பால் தங்கு தடை இன்றி கிடைத்திட   தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. அந்த வகையில் சென்னையில் 24 மணி நேரம் ஆவின் பாலகங்கள் செயல்பட தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.

ஒரு நபர் அதிக பட்சமாக 4 பால் பாக்கெட் வாங்கிக் கொள்ள தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.மேலும்  அண்ணா நகர் டவர், மாதவரம் பால்பண்ணை, வண்ணாந்துரை, பெசன்ட் நகர், வசந்தம் காலனி, அண்ணா நகர் கிழக்கு, சோழிங்கநல்லூர் பால் பண்ணை, விருகம்பாக்கம், சி.பி.ராமசாமி சாலை ஆகிய  பகுதிகளில் உள்ள ஆவின் பாலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.