குட் டச், பேட் டச் பற்றி மாணவிகளுக்கு பாடம் எடுத்த ஆசிரியை… இந்த கல்வி முக்கியம் என்று கருத்து…
குட் டச் மற்றும் பேட் டச் பற்றி பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியை ஒருவர் பாடம் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இந்த பாடம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று வீடியோ பார்த்த அனைவரும் கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
எக்ஸ் பக்கத்தில் ரோஷன் ராய் என்பவர் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் ஆசிரியை ஒருவர் மாணவிகளுக்கு எளிமையான முறையில் நல்ல தொடுதல் எது?(Good Touch) கெட்ட தொடுதல் எது?(Bad Touch) என்பது பற்றி மிக எளிமையாக அந்த ஆசிரியை பள்ளி மாணவிகளுக்கு சொல்லி கொடுக்கின்றார்.
அந்த ஆசிரியை மாணவிகளுக்கு தலையில் தட்டுதல், கட்டிப் பிடித்தல், உடல் ரீதியாக அல்லது உணர்ச்சி ரீதியாக காயப்படுத்துதல், தீங்கு விளைவிக்கக் கூடிய முறையில் தொடுதல் ஆகியவை குறித்து உதாரணங்களுடன் சொல்லி கொடுக்கின்றார். ஆசிரியை குட் டச், பேட் டச் குறித்து பாடம் எடுக்கும் இந்த வீடியோவை தற்பொழுது வரை 10 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் பார்த்துள்ளனர்.
குட் டச் எது? பேட் டச் எது? என்பது குறித்த வீடியோவை பார்த்த நபர்கள் அனைவரும் இந்த வைகயான கல்வி பள்ளிகளில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது போன்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இத்தகைய கல்வியை மாணவிகளுக்கு சொல்லி கொடுத்த ஆசிரையை அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றது.