
ADMK: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாத காலமே இருக்கும் நிலையில், அரசியலில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக மேல், மக்களுக்கு அதிருப்தி ஏற்படும் வகையில், திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. எதிர்க்கட்சியான அதிமுகவின் மேல் ஏற்கனவே மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்ட நிலையில், அதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், சில சம்பவங்கள் ஏற்பட்டிருக்கிறது. திராவிட கட்சியான அதிமுக முன்பு போல இல்லாமல் தற்போது செயலிலந்து காணப்படுகிறது. அதற்கு இபிஎஸ்யின் தலைமை தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் தான் இபிஎஸ்யின் செயல்பாடுகளும் உள்ளது. அதில் ஒன்று தான் அதிமுகவின் முக்கிய தலைவர்களின் நீக்கம். எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்ட முக்கிய தலைவர்கள் ஒன்றிணைந்து நால்வர் அணியாக உருவெடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பசும்பொன்னில் நடந்த தேவர் ஜெயந்தி விழாவில் இந்த நிகழ்வு அரங்கேறியது. அப்போது டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் என மூவரும் ஒன்றாக இணைந்து பேட்டியளித்த நிலையில் சசிகலா மட்டும் அவர்களுடன் இல்லை. ஆனால் தினகரன், சசிகலாவும் எங்கள் அணியில் தான் இருக்கிறார் என்று கூறினார்.
பலரும் இதனை சசிகலா தனித்து விடப்பட்டுள்ளார் என்று விமர்சித்து வந்தனர். தற்சமயம் அது உறுதியாகியுள்ளது. ஏனென்றால், செங்கோட்டையன் தவெகவில் இணைய உள்ளதாகவும், ஓபிஎஸ் தனி கட்சி ஆரம்பிக்க போவதாகவும், தினகரன் கூடிய விரைவில் கூட்டணியை அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறு இவர்கள் மூவரும் ஒரு பாதையில் சென்று கொண்டிருக்க சசிகலாவின் நிலைப்பாடு மட்டும் என்னவென்றே தெரியவில்லை. மூவரில் ஒருவருடன் கூட சசிகலா தென்படாததால் இவர் நால்வர் அணியிலிருந்து புறக்கணிப்பட்டுள்ளார் என்று அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதனால் சசிகலாவை ஒதுக்கி விட்டு கூடிய விரைவில் மூவர் அணி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
