உலகத்தில் மிகச் சிறிய ஸ்பூன் உருவாக்கிய வாலிபர்… கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு!!

0
112

 

உலகத்தில் மிகச் சிறிய ஸ்பூன் உருவாக்கிய வாலிபர்… கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிப்பு…

 

உலகிலேயே மிக மிகச் சிறிய அளவிலான ஸ்பூன் ஒன்றை இந்திய வாலிபர் ஒருவர் தயாரித்து கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

 

உலகில் உள்ள அனைவரும் தங்களுக்கு இருக்கும் தனித்துவமான திறமைகளைக் கொண்டு சாதனை படைக்க வேண்டி பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இடைவிடா சாகசம், நீண்ட நேரம் சமையல் போன்று பலர் கின்னஸ் சாதனைகளை படைத்து வருகின்றனர். அந்த வகையில் பீகாரை சேர்ந்த வாலிபர் ஒருவர் பேனாவின் நுனியை விட சிறியதான ஸ்பூன் ஒன்றை தயாரித்தா கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

 

பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் சஷிகாந்த் பிரஜாபதி கைவினை பொருட்களை தயாரிப்பதில் கை தேர்ந்தவர் ஆவார். இவர் மரத்தை வைத்து உலகிலேயே மிகச் சிறிய அளவிலான 1.6 மில்லி மீட்டர் அளவு கொண்ட மிகச் சிறய ஸ்பூன் தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

 

இந்த சிறிய ஸ்பூன் தயாரிக்க பல முறை முயற்சி செய்த சஷிகாந்த் பிரஜாபதி 10 முறை தோல்வி அடைந்துள்ளார். இருந்தும் மனம் தளராத சஷிகாந்த் பிரஜாபதி அவர்கள் மீண்டும் மீண்டும் விடாமுயற்சியால் இந்த விஸ்வரூப வெற்றியை அவர் அடைந்துள்ளார்.

 

இதற்கு முன்னர் இந்திய கைவினை கலைஞரான நவ்ரதன் பிரஜாபதி மூர்த்திகர் என்பவர் உருவாக்கிய 2 மில்லி மீட்டர் அளவு உள்ள ஸ்பூன் தான் உலகிலேயே மிகச் சிறிய ஸ்பூன் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்று இருந்தது. தற்பொழுது அந்த சாதனையை சஷிகாந்த் அவர்கள் முறியடித்துள்ளார். சஷிகாந்த் பிரஜாபதி அவர்கள் இந்த சிறிய அளவிலான ஸ்பூனை தனிதனிப் பாகங்களாக செய்யாமல் ஒரே மரத்துண்டில் செய்து அசத்தியுள்ளார்.

 

Previous article படிக்கும் பள்ளியில் கேவலமான சம்பவத்தை செய்த மர்ம நபர்கள்!! போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!!
Next articleஅமெரிக்காவில் உயிரிழந்த மத்திய அரசின் முன்னாள் உயரதிகாரிக்கு பிரதமர் மோடி இரங்கல்!!