கோவில் நிலம் தொலைந்து விட்டது! மீட்டு தர வேண்டும்! இவ்வளவு ஏக்கர்களா?

0
147
The temple land is lost! Must be redeemed! So many acres?
The temple land is lost! Must be redeemed! So many acres?

கோவில் நிலம் தொலைந்து விட்டது! மீட்டு தர வேண்டும்! இவ்வளவு ஏக்கர்களா?

சென்னை ஹைகோர்ட்டில் வக்கீல் யானை ராஜேந்திரன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில் திருவாரூர் மாவட்டத்தில் திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவச்சல பெருமாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது என்றும், விஜய ரகுநாத நாயக்கர் என்ற அரசரால் 1608 ஆம் ஆண்டு இந்த கோவிலுக்கு 400 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது என்றும், இதற்கான தாமிரப் பட்டயமும் எழுதி வைக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவில் நிர்வாகத்திடம் அதெல்லாம் இருந்தன. 2019ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அந்த தாமிரப் பட்டயம் சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பின் அது மாயமாகி விட்டது. 400 ஏக்கர் நிலத்தில் தற்போது கோவிலின் வசம் ஏழு ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது.

கடந்த மார்ச் 7ஆம் தேதி தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே நில அளவையர் உதவியுடன் 400 ஏக்கர் நிலத்தையும், அந்த தாமிர பட்டயத்தையும் மீட்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பில் இருந்து பதில் அளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிப்பதாக உத்தரவிட்டனர்.

Previous articleஇவ்வளவு உயர சாலையா? இந்தியாவில் தான் உள்ளதா?
Next articleஇனி இது இருந்தால் மட்டுமே மாநிலத்திற்குள் வர அனுமதி..? தமிழக அரசு அதிரடி