தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 29,976 பேருக்கு நோய் தொற்று பாதிப்பு! சுகாதாரத்துறை தகவலால் அதிர்ச்சி!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் நேற்றைய தின நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது, தமிழ்நாட்டின் நேற்று புதிதாக 1,41, 262 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 17 147 ஆண்கள் மற்றும் 12829 பெண்கள் என்று ஒட்டுமொத்தமாக 25, 976 பேருக்கு புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதில் வெளிமாநிலங்களில் இருந்து வருகைதந்த 18 பேரும் 12 வயதிற்கு உட்பட்ட 1033 குழந்தைகளும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 4, 809 பேரும் அடங்குவர் .அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 1973 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 1883 பேரும், கோயம்புத்தூரில் 3740 பேரும், ஈரோட்டில் 1302 பேரும், கன்னியாகுமரியில் 10,35 பேரும், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குறைந்தபட்சமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் இதுவரையில் பரிசோதனையின் எண்ணிக்கை 6 கோடியை தாண்டி இருக்கிறது, அந்த விதத்தில் 60024712 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இதுவரை 32,24,236 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதில் 12 வயதிற்கு உட்பட்ட 1,20,672 குழந்தைகளும் 60 வயதிற்கு மேற்பட்ட 4,68,103 முதியவர்கள் இடம் பிடித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நேற்றைய நிலவரப்படி அடிப்படையில் 9,906 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 4,732 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும்1132 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நோய் தொற்றுக்கு தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனையில் 21பேரும், தனியார் மருத்துவமனையில் 26 பேரும், என்று 47 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று பலியாகியிருக்கிறார்கள். அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 23 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும், திருப்பூர் மாவட்டத்தில் மற்றும் தூத்துக்குடி, திருவள்ளூர், தஞ்சை, ராணிப்பேட்டை, கோயமுத்தூரில் தலா 2 பேரும் திருச்சி, மதுரை, சேலம், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் தலா ஒருவரும் என்று 14 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது. 24 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் இதுவரையில் ஒட்டுமொத்தமாக 37,359 பேர் நோய் தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள் இந்த நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 22,507 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 8,694 பேரும், செங்கல்பட்டில் 2179 பேரும், கோயம்புத்தூரில் 3740 பேரும், அடங்குவர். இதுவரையில் 29,73,185 பேர் குணமடைந்து இருக்கிறார்கள். 2,13,792 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள் இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .