ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்த சோதனை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

0
203
#image_title
ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு வந்த சோதனை! சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று(மே 28) நடைபெறவுள்ள நிலையில் இறுதிப்போட்டி நடப்பதில் ஒரு சிறிய சோதனை வானிலை மூலமாக வந்துள்ளது. இதனால் ஐபிஎல் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளது. ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையில் நடப்பு சேம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மகேந்திர சிங் தோனி தலைமையில் 4 முறை கோப்பை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது.
இன்று நடக்கவிருக்கும் இறுதிப் போட்டியில் கோப்பையை யார் கைபற்றுவார் என்பதில் எந்த அளவுக்கு ஆர்வம் உள்ளதோ அதே அளவுக்கு போட்டி இன்று நடைபெறுமா என்ற சோகமும் ரசிகர்களிடையே இருக்கின்றது. இந்த சோகத்திற்கு காரணம் அங்கு நிலவும் வானிலை தான்.
ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய இரண்டாம் குவாலிபையர் போட்டியின் போது மழை பெய்தது. இன்று மதியம் வரை வானம் தெளிவாக இருந்ததாலும் மழைக்கான வாய்ப்பு அதிக அளவு உள்ளது என்று தனியார் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று மாலை நேரத்தில் சுமார் இரண்டு மணி நேரமாவது மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மழைக்கு பிறகு குறைந்தபட்சம் ஐந்து ஓவர்களை வீசி முடிக்க முடியாவிட்டால் கூடுதல் நிபந்தனைகளுடன் போட்டி அடுத்த நாளுக்கு மாற்றப்படும். இன்று குறைந்தது ஒரு பந்தாவது வீசப்பட்டால் ரிசர்வ் நாள் போட்டியானது விட்ட இடத்திலிருந்து தொடங்கப்படும்.
இன்று டாஸ் போடப்பட்டாலும் ரிசர்வ் நாளான நாளை இரண்டு அணிகளுக்கும் 20 ஓவர்கள் விளையாட வாய்ப்பு அளிக்கப்படும். ரிசர்வ் நாளில் மீண்டும் டாஸ் போடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அணியில் மாற்றம் செய்வதற்கு கேப்டன்களுக்கு அனுமதி அளிக்கப்படும்.
Previous articleஉலக டெஸ்ட் சேம்பியன்சிப் இறுதி போட்டி!ருத்ராஜ் கெய்க்வாட்க்கு பதிலாக ஜெய்ஸ்வால்க்கு வாய்ப்பு!!
Next articleஉலக பட்டினி தினம் 2023! தமிழ்நாடு மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் உணவு அளிக்கப்பட்டது!!