ban on movie review: தமிழகத்தில் புதிதாக திரையிடப்படும் படங்கள் குறித்து ரிவியூ எடுக்க யூடியூப் சேனல்களுக்கு தடை வழங்க வேண்டும் திரையரங்க சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் தான் கங்குவா. இந்த படத்திற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இதனால் கங்குவா படம் வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்தது. மேலும் கங்குவா படக்குழுவினர் மீது விமர்சனம் வைக்கப்பட்டது.
மேலும் கங்குவா படம் குறித்த விமர்சன செய்திகள் தான் சமூக வலைதளங்கள் முழுவதும் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் தான தமிழக திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்து உள்ளார்கள். அதில் கடந்த சில வருடங்களாக திரைப்படம் குறித்த விமர்சனங்கள் அதிக அளவில் யூடியூப் சேனல் எடுக்கிறார்கள்.
இதில் சிலர் வேண்டும் என்று திரைப்படங்கள் குறித்து தவறான விமர்சனங்களை வைக்கிறார்கள் இதனால் தான் சில படங்கள் தோல்வியை சந்திக்கும் என்றும், தமிழகத்தில் சிறப்பு காட்சிகள் தொடங்குவதற்கு முன்பே அண்டை மாநிலங்களில் படங்கள் திரையிடப்படுகின்றன அதை பார்த்து வந்த சில ரசிகர்கள் வேண்டும் என்றே யூடியூப் சேனலில் ரிவியூ கொடுக்கிறார்கள்.
எனவே ஒரு திரைப்படம் திரையிடப்பட்டு இரண்டு வாரங்களுக்கு பிறகே அப் படம் குறித்து ரிவ்யூ யூடியூப் சேனல்கள் எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். மேலும் யு டியூப் சேனல் மூவி ரிவியூ க்கு தடை வழங்க வேண்டும் என திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் இயக்குனர் பாரதிராஜ மூவி ரிவியூ க்கு தடை வழங்க வேண்டும் என கூறியிருக்கிறார்.