செவ்வாய்க் கிழமையோடு வரும் மூன்றாம் பிறை..!! முருகனுக்கு உகந்த இந்த நாளை தவற விடாதீர்கள்..!!

Photo of author

By Janani

செவ்வாய்க் கிழமையோடு வரும் மூன்றாம் பிறை..!! முருகனுக்கு உகந்த இந்த நாளை தவற விடாதீர்கள்..!!

Janani

இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (29.4.2025) மூன்றாம் பிறை தரிசனம் காணக்கூடிய நாளாகும். மேலும் இன்றைய தினத்துடன் ஒரு முக்கியமான தினமும் வருகிறது. அதாவது சித்திரை மாதத்தின் 16-வது நாள் என்பது மிகவும் விசேஷமான ஒரு நாள். இந்த ஒரு நாளில் நீங்கள் செய்யக்கூடிய ஒரு அற்புதமான வழிபாட்டின் மூலம் உங்கள் குடும்பத்தில் உள்ள வறுமை நீங்கும், கடன் பிரச்சனை தீரும், குழந்தை பாக்கியம், சொந்த வீடு நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும். இந்த வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காண்போம்.

பொதுவாக மாதம் மாதம் வருகின்ற அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாவது நாள் தான் மூன்றாம் பிறை. இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை எவர் ஒருவர் செய்கிறாரோ அவருடைய வாழ்க்கையில் கஷ்டங்கள் இருக்காது. மாதம் மாதம் தொடர்ந்து இந்த ஒரு வழிபாட்டை செய்து வருவதன் மூலம் குடும்பத்தில் உள்ள வறுமை நீங்கும். குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் சரி இந்த சந்திர தரிசனத்தை செய்யும் பொழுது உடனடியாக தீரும்.

மேலும் இந்த மூன்றாம் பிறையானது செவ்வாய்க் கிழமையோடு, கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. எனவே இந்த நாளை தவிர விடாமல் வழிபாடு செய்தால் அனைத்து விதமான பிரச்சனைகளும் நீங்கி குடும்பம் சுபிட்சமாக இருக்கும். இந்த செவ்வாய் கிழமை என்பது முருகனுக்கு உகந்த தினம் என்பதால், முருகன் துணை உங்களுக்கு எப்பொழுதும் இருக்கும். இந்த நாளில் விரதம் இருக்க நினைப்பவர்கள் விரதம் இருக்கலாம்.

காலை எழுந்ததும் குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் முருகனுக்கு உகந்த சிவப்பு நிற மற்றும் செவ்வரளி பூக்களால் அலங்கரித்து தீபம் ஏற்றி, கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்யலாம். முடிந்தவர்கள் அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்று வரலாம். உங்களுக்கு என்ன வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமோ அதனை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

அடுத்ததாக மாலை நேரத்தில் முருகனுக்கு உகந்த நெய்வேத்தியம் சக்கரை பொங்கல், பாசிப்பருப்பு பாயாசம் அல்லது முருகனுக்கு மிகவும் பிடித்த தேனும், திணைமாவும் வைக்கலாம். முருகனுக்கு முன்பாக நட்சத்திர கோலம் போட்டு, ஆறு அகல் விளக்குகளில் நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும். மேலும் இன்றைய தினம் முழுவதும் உங்களால் முடிந்த அளவிற்கு “ஓம் சரவண பவ” என்ற மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருங்கள்.

கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்ய வேண்டும் இந்த முருகன் வழிபாட்டை மாலை 6:00 மணி முதல் 7:15 மணி வரை செய்து கொள்ளலாம். அடுத்ததாக வீட்டிற்கு வெளியே வந்து மூன்றாம் பிறை சந்திரனை தரிசிக்க வேண்டும். இந்த சந்திர தரிசனத்தின் பொழுது பிறை நிலவை தனது தலையில் கொண்டுள்ள சிவன், விநாயகர், அம்பாள் ஆகியோரையும் வணங்க வேண்டும்.

இந்த சந்திர தரிசனத்தின் பொழுது உங்களுடைய வேண்டுதல்களை கூறிய பின்னர் “ஓம் சந்திரமௌலீஸ்வராய நமஹ”என்ற மந்திரத்தை 9 முறை உச்சரிக்க வேண்டும். இறுதியாக பூஜை அறையில் இருக்கும் முருகனுக்கு தீப ஆராதனை காட்டி “ஓம் சரவண பவ” என்ற மந்திரத்தை உச்சரித்து, வழிபாட்டை நிறைவு செய்து கொள்ள வேண்டும். நெய்வேத்தியமாக வைத்த உணவினை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்துவிட்டு, நீங்களும் உண்டு உங்களுடைய விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.

இன்றைய தினம் செவ்வாய்க் கிழமையோடு வருகின்ற மூன்றாம் பிறை தினத்தன்று இந்த வழிபாட்டை தொடங்கி, தொடர்ந்து ஆறு செவ்வாய்க் கிழமை உங்களது வேண்டுதல்களை வைத்து, இந்த வழிபாட்டை செய்யும் பொழுது உங்களுடைய வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும் நிச்சயம் நிறைவேறும்.