திமுகவைப் புறக்கணிக்கும் காலம் வந்துவிட்டது!

0
141

எம்ஜிஆரின் நினைவு நாள் அன்று நான் தொண்டர்களுடன் எம்ஜிஆர் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த இருந்த சூழ்நிலையில், திடீரென்று 23ஆம் தேதி சென்னை காவல்துறை ஆணையாளரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக பொது இடங்களில் பொது மக்கள் கூடுவதை தடுப்பதற்காக எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி மறுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன்காரணமாக, காவல்துறையினரின் வேண்டுகோளை மதித்து நோய்த்தொற்று விதிமுறைகளைக் கடைப்பிடித்து அலுவலக வளாகத்திலேயே அஞ்சலி செலுத்தினேன் என்று தெரிவித்திருக்கிறார் சசிகலா.

அதேநாளில் தமிழக முதலமைச்சர் பொது இடத்தில் கூட்டம் சேர்த்து ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்டதை தொலைக்காட்சியில் என்னால் பார்க்க முடிந்தது. அதேபோல கோயம்புத்தூரில் ஆளும் கட்சியின் சார்பாக பொதுக்கூட்டம் என்ற பெயரில் ஏராளமானவர்களை ஒரே இடத்தில் கூட்டமாக சேர்த்து எந்தவிதமான நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் அவர்களுடைய கட்சியை சார்ந்த நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்கள். ஆகவே இதுபோன்ற ஆளுங்கட்சியினரின் செயல்பாடுகள் மட்டும் தமிழக காவல்துறையினரின் கண்களில் படாமல் இருந்துவிடுகின்றதா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் சசிகலா.

புதிய வகை நோய்த்தொற்று மெரினாவை சுற்றி இருக்கின்ற பகுதிகளில் மட்டும் பரவக்கூடிய ஒரு தொற்றா? அண்ணாசாலை மற்றும் கோவை கொடிசியா மைதானம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த நோய் தொடர்பாக என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார்கள். தமிழக மக்கள் திமுகவை முற்றிலுமாக புறக்கணிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று அவர் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

Previous articleபொங்கல் பரிசு தொகுப்பு! ரேஷன் கடைகளில் டோக்கன் வினியோகம்!
Next articleநோய் தொற்று பாதிப்பு எதிரொலி! டெல்லியில் அமலானது இரவு நேர ஊரடங்கு!