மீண்டும்  AI விஜயகாந்த்!! “படை தலைவன்” பட டிரைலரில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!!

Photo of author

By Sakthi

Pada Thalaivan movie: மறைந்த விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் “படை தலைவன்” திரைப்படத்தின் ட்ரைலர் வெளியானது.

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த வருடம் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி உயிரிழந்தார். இவரது உயிரிழப்பு என்பது  தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இவர் நடித்த படங்களின் பாடல் மற்றும் விஜயகாந்த் அவர்களை AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி திரைப்படத்தில் கட்சி படுத்தி வந்தார்கள்.

அந்த வகையில் விஜய் நடிப்பில் சமீப காலத்திற்கு முன் வெளியான “THE GOAT” திரைப்படத்தில் தொடக்கக் காட்சியில் விஜய் காந்த குரல் மற்றும் அவரின் தோற்றம் AI மூலம் கொண்டு வரப்பட்டு இருந்த காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. “லப்பர் பந்து” திரைப்படத்தில் விஜயகாந்தின் ‘நீ பொட்டு வச்ச தங்கக்குடம்’ பாடல் பயன்படுத்தப்பட்டது.

இது மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. இந்த நிலையில் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகும்   “படை தலைவன்” திரைப்படத்தின் டிரைலர்  நேற்று வெளியானது. இந்த படத்தை இயக்குனர் அன்பு இயக்கி இருக்கிறார். இளையராஜா அவர்கள் இசையமைத்து இருக்கிறார். இந்த பட  டிரைலர்  பார்க்கும் போது யானை உடன் சேர்ந்து சண்முக பாண்டியன் பயணிக்கும் கதைக்களமாக அமைந்து இருக்கிறது.

இந்த படத்தில் விஜயகாந்த் படத்தின் பாடல்கள்   ‘நீ பொட்டு வச்ச தங்கக்குடம்’ பாடல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. மேலும், ட்ரைலர் இறுதியில்  ‘என்ன பெத்தவரு இந்த பெரியவரு’ என தொடங்கும் பாடல் வரிகளுடன் AI விஜயகாந்தை வருவது போல அமைந்து இருக்கிறது.