நாளை மாலை வெளியாகிறது ‘புஷ்பா 2 டிரைலர் !! குதூகலத்தில் ரசிகர்கள்!!

Photo of author

By Sakthi

Pushpa 2′ movie: நாளை மாலை  6 மணிக்கு வெளியாகிறது   ‘புஷ்பா 2’ படத்தின் டிரைலர்.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில்  2021 ஆம் ஆண்டு வெளியான படம் தான்  “புஷ்பா: தி ரைஸ்”  திரைப்படம். இப் படத்தில் கதாநாயகனாக அல்லு அர்ஜுன் நடித்து இருந்தார். இப் படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து இருந்தார்கள். இப்படம் தெலுங்கில் மட்டுமல்லாமல்  தமிழிலும் ஹிட் கொடுத்தது.

இதனால் இப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்தார். அதை நிறைவேற்றும் வகையில்  புஷ்பா  படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு தொடங்கினார்கள் படக்குழுவினர்.  புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது  மேலும் புஷ்பா 2 படத்தின் எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்தது படக்குழு.

இந்த நிலையில் தான் புஷ்பா 2 திரைப்படம் வரும் டிசம்பர் 5ஆம் தேதி  வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த  இந்த நிலையில் தான் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்  நவம்பர் 17 ஆம் தேதி டிரைலர் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்து இருக்கிறது.  நாளை மாலை 6 மணிக்கு புஷ்பா 2  ட்ரைலர் வெளியாகியுள்ளது.

மேலும் புஷ்பா 2  டிரைலர்  வெளியீட்டு விழாவை  பாட்னா மாநிலத்தில் மிக பிரம்மாண்டமாக படக்குழு நடத்த முடிவு செய்து இருக்கிறது. மேலும் புஷ்பா 1 படத்தில்  நடிகை சமந்தா ஆடிய பாடல் மிக ஹிட் ஆனது, அந்த வகையில் புஷ்பா 2 படத்தில் நடிகை  ஸ்ரீலீலா கிஸிக் என்ற பாடலுக்கு நடனமாடி உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.